பாஜக தனது ஆட்சிக்கும் காங்கிரசின் கடந்த 2009-2014 ஆட்சியுடன் ஒப்பிட்டு ஒவ்வொரு விஷயமாக வெளியிடுகிறது. அதன் முதல் கட்டமாக இன்று வெளியிடப்பட்ட போஸ்டர்கள்.
அந்நிய நேரடி முதலீடு ஒப்பீடு:
போகிபீல் பாலம்:
காஸ்(GAS) சேவை:
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 100 நாட்களில் 6,85,000 பேருக்கு ஐந்து லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு மூலம் பலன் அடைந்துள்ளார்கள். அதை விளக்கும் பொருட்டு…
வீட்டுக் கடன் தற்போது எந்தளவுக்குக் குறைந்துள்ளது என்பதை விளக்க;
கும்ப மேளாவிற்கு ஒதுக்கியுள்ள தொகை ஒப்பீடு
இன்னும் ஒவ்வொரு துறை சார்ந்தும் கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிட்டு தாங்கள் செய்த சாதனைகளின் பட்டியல் வரும் என்று பாஜக தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியும் தமது ஆட்சியின் சாதனைகளை விளக்க நமோ ஆப் என்ற ஆப்பின் உருவாக்கியுள்ளார். இன்னும் நான்கு மாதங்களுக்குள்ளாக தமது ஆட்சி காங்கிரசைக் காட்டிலும் எவ்வளவு சிறப்பாக நடந்துள்ளது என்பதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென கட்சி நிர்வாகிகள், சட்டசபை உறுப்பினர்கள், எம்பிக்கள் அனைவருக்கும் கட்டளை இட்டுள்ளார். மக்களுக்கு இதன் மூலமாக இரு ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து வாக்களிக்க உதவும், பாஜக தரப்பு பொய் சொன்னால் பதிலடி கொடுக்கப்படும் என்பதும், அதேபோல காங்கிரஸ் பொய் சொன்னால் அதற்கும் பதிலடி கொடுக்கப்படும் .