வடக்கு டெல்லி மாநகராட்சிக்கு மேயராக ஒரு டீ கடை நடத்தியவரை பாஜக தேர்வு செய்துள்ளது. சீக்கிய மத பட்டியல் இன சமூகத்தைச் சார்ந்த அவதார்சிங் அவர்களை ஓராண்டு கால மேயர் பதவிக்கு கட்சி தேர்வுசெய்துள்ளது. டெல்லியில் உள்ள மாநகராட்சிகளுக்கு மேயர் பதவி ஓராண்டுகால அளவிலானது. வெற்றி பெற்ற கட்சி தனது பதவிக்காலத்தில் ஐந்து மேயர் வேட்பாளர்களை சுழட்சி முறையில் நியமிக்கலாம்.
இது போல கிழக்கு டெல்லிக்கு திருமதி அஞ்சு கலம்காரையும், தெற்கு டெல்லிக்கு திருமதி அஞ்சு கங்காராவையும் மேயர் பதவிக்கு பாஜக தேர்வு செய்துள்ளது.
ஏற்கனவே சண்டிகர் மேயர் பதவிக்கு குப்பை பொறுக்கும் தொழிலில் இருந்த ராஜேஷ் காலியாவை பாஜக தேர்வு செய்தது குறிப்பிடத் தகுந்தது.
(Visited 52 times, 1 visits today)