சென்னை: சென்னை கிரௌன் பிளாசா ஹோட்டலில் நடந்த அதிமுக பாஜக கட்சியினரின் சந்திப்புக்குப் பிறகு , செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்த னர். ஓ. பன்னீர் செல்வம் , அதிமுக அணியில் லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே காலையில் அதிமுக பாமக உடன்பாடு எட்டப்பட்டு, பாமகவிற்கு அதிமுக அணியில் 7 லோக்சபா இடங்களும் 1 ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டு விட்டது.
அடுத்து தேமுதிக அதிமுக சந்திப்பு நடக்கும் என்று தெரிய வருகிறது.
இச்சந்திப்பில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பியுஷ் கோயல் கூறியதாவது, தேசிய ஜனநாயக் கூட்டணி தமிழகத்திலும் ஏற்பட்டு உள்ளது. அதனால் மிக்கல் மகிழ்ச்சி என்றார். பின்னர், நாற்பதும் நமதே என்றும் தெரிவித்தார். எந்தெந்த தொகுதிகளில் யார் நிற்பது போன்றவை இன்னும் சில தினங்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றனர்.