வரலாற்றில் இன்று – ஜனவரி 12 – சூர்யா சென்
ஜனவரி 12 – 1934ஆம் ஆண்டு மாஸ்டர் தா என்று அறியப்பட்ட சூர்யா சென் அவர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்.
1894ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் ஆண்டு பிறந்த சூர்யா சென் ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அதனால் தனது தோழர்களால் இவர் மாஸ்டர் தா என்று மரியாதையாக அழைக்கப்பட்டார். தேசபக்தியால் உந்தப்பட்ட சூர்யாசென் அனுசீலன் சமிதி என்ற ஆயுதம் தாங்கிய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
1930ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் இவர் தலைமையில் அன்சீலன் சமிதியின் உறுப்பினர்கள் சிட்டகாங் நகரில் இருந்த ஆயுதக் கிடங்கைக் கொள்ளை அடித்தனர். ஆங்கிலேயர் வசம் இருந்த ஆயுதக்கிடங்கில் இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டனர்.
அதன் பிறகு நடந்த தேடுதல் வேட்டையில் நேத்ராசென் என்பவரால் மாஸ்டர் தா காட்டிக்கொடுக்கப்பட்டார். அனுசீலன் சமிதியின் போராளிகளால் நேத்ராசென் கொல்லப்பட்டார்.
1934ஆம் ஆண்டு இதே நாளில் சூர்யாசென் தூக்கிலிடப்பட்டார். தேசத்திற்காக தனது வாழ்வைத் தியாகம் செய்த வீரர்களின் நினைவை என்றும் போற்றுவோம்
Thanks for reminding surya sen👍