சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

கலகலக்கிறதா திமுக ?

என்னதான் ஆவேசமாகப் பேசினாலும், அது திறமையாகச் செயல் படுவதாக பொது மக்கள் மத்தியில் காட்டிக் கொண்டாலும் கூட, திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சி இப்போது தனது இறுதி அத்தியாயத்தை நோக்கிச் செல்வதை அதன் தொண்டர்களே உணரத் தொடங்கி விட்டனர்.

இறுதி அத்தியாயம் என்கிற எனது வார்த்தை ஏதோ போகிற போக்கில் பயன்படுத்தப்படவில்லை.

தி.மு.க தலைமை செல்லும் பாதை, இரண்டாம் கட்ட தலைவர்களின் செயல்பாடுகள், களத்தில் நிற்கும் தொண்டர்களின் மனநிலை …. இத்தியாதிகளை உளவியல் ரீதியாகச் சற்று கூர்ந்து கவனித்தாலே புரியும்.

இந்தக் காரணங்களை வரிசையாக அடுக்குகிறேன்:

கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழக அரசியல் களத்திலும், ஆட்சி அதிகாரத்திலும், அரசின் கொள்கை முடிவுகளிலும் தி.மு.க என்ற கட்சியைத் தவிர்த்த ஒரு வரலாற்றை எழுத யாராலும் எழுத முடியாது.

இந்திய அரசியலிலும் அதன் தாக்கம் பல நேரங்களில் இருந்தது.

இந்த அளவுக்கு கடந்த கால வரலாறுகளையும் சாதனைகளையும் கொண்ட ஒரு கட்சி ரெங்கராஜ் பாண்டே என்கிற தனி ஒரு மனிதனுக்கு எதிராக அரசியல் செய்து காய் நகர்த்தும் கேவலமான நிலைக்கு வந்து விட்டது.

எம்.ஜி.ஆர் என்கிற ஒரு ஆளுமை கூட தனி மனிதர் தான் என கூறலாம். ஆனால் ஒரு விசயத்தை ஒப்பிட்டு பார்க்கவும்.

எம்.ஜி.ஆர் தனி மனிதர் அல்ல. அவர் அதே கட்சியில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர். அந்த கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியே மக்களிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த அரசியல்வாதி.

ஆனால் ரெங்கராஜ் பாண்டே அப்படி அல்ல. அவர் அரசியல் வாதியுமல்ல. மக்களிடம் செல்வாக்கு பெற்றவரும் அல்ல. அவரது பத்திரிக்கை துறை சார்ந்த தொழில் மூலம் குறிப்பிடத்தகுந்த வட்டத்திலும், ஓரளவாவது படித்த மக்களிடமும் அறிமுகமானவர் மட்டுமே.

ஆனால் அரசியல் சம்பந்தமான தகவலறிவு உள்ளவர், சமூக அக்கறை உள்ளவர் அவர் பேசுவது உண்மை என்கிற ஒரு பிம்பம் இளைஞர்களிடம் பலமாக உள்ளது.

அறுபது வருட காலமாக பழம் தின்று கொட்டை போட்ட தி.மு.க, இந்த இடத்தில் தான் திரு. ரெங்கராஜ் பாண்டேயைப் பார்த்து மிரள்கிறது. இவர் வாயைத் திறந்தால் அதன் பாதிப்பு வெளியில் வெளிப்படையாகத் தெரிவதால் தன் பழைய சாதனைகளை மறந்து, பாண்டே என்கிற தனி மனிதனுக்கு எதிராக தனது அல்லக்கை கூட்டங்களை வைத்துக் காய் நகர்த்துகிறது.

தனி ஒரு மனிதனுக்கு எதிராக எப்போது ஒரு அரசாங்கமோ, அமைப்போ திட்டங்களைத் தீட்டி செயல்பட ஆரம்பிக்கறதோ… அப்போதே அந்த அரசு அல்லது அமைப்பு பலவீனப்பட்டு விட்டது என்பதே உளவியல் தத்துவம்.

——————

கருணாநிதி ஒரு ஹிந்து எதிர்ப்பு அரசியல்வாதி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஆனால் ஹிந்து எதிர்ப்பு என்பதை ஒரு ஊறுகாயைப் போலத்தான் உபயோகித்தார். ஏனெனில் முழுமையான இந்து எதிர்ப்பை கையிலெடுத்தால் அதற்கான எதிர்வினையாக இந்து ஓட்டு வங்கியாக உருவாகும் கட்டாயத்தை நோக்கி மக்கள் தள்ளப்படுவார்கள்.

அப்படி இந்து ஓட்டு வங்கி உருவானால்…

தமிழகத்தின் மொத்த மைனாரிட்டிகளின் ஓட்டு வங்கி வெறும் 10% மட்டுமே. இதை மட்டுமே வாங்கி அரசியலில் நாக்கு வழிக்கக் கூட முடியாது. கருணாநிதி தனது தொழிலைச் செய்து கூட தமிழகத்தில் பிழைக்கவும் முடியாது என்பதை அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.

அதனால்தான் தன்னுடன் ஒட்டிக்கொண்டுள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளை திருப்திப் படுத்தி அந்த ஓட்டு வங்கியை காப்பாற்றிக் கொள்வதற்காக அதிகமாக போனால் வருடத்திற்கு ஒரு முறை சர்ச்சைக்குறிய இந்து எதிர்ப்புக் கருத்துக்களை ஓரிரண்டு வார்த்தைகளை மட்டும் வீசி விட்டு பிறகு அதைக் கண்டு கொள்ளாமல் போய் விடுவார்.

அது நன்றாகவும் வேலை செய்தது. தீவிரமான இந்து உணர்வாளர்கள் அவரின் அந்தக் கருத்துக்களை விமர்சித்து பேசுவார்கள். இங்குள்ள இந்துக்கள் அதை பெரிது படுத்துவதில்லை. ஏனெனில் இந்துக்களின் உளவியல் அப்படிப்பட்டது.

இதை புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணத்தை பார்க்கலாம். பல திரைப்படங்களில் இந்து கடவுள்களை வைத்து ஏகப்பட்ட நகைச்சுவை காட்சிகள் அமைக்கப்படுகின்றன.

பிள்ளையார் சிகரெட் பிடிப்பார், சிவன் ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு போவார், பிரம்மச்சாரி ஆஞ்சனேயர் காதலிப்பார். இந்த காட்சிகளை படத்தில் வைத்த இயக்குனர், நடித்த நடிகர், தயாரிப்பாளர் அனைவரும் இந்துக்களாகத்தான் இருப்பார்கள். அந்த படத்தை கூட பிள்ளையாரை வணங்கி ஆரம்பித்து இந்து மத நம்பிக்கைப் படி பூசணிக்காய் உடைத்துத் தான் முடிப்பார்கள்.

இந்த காட்சிகள் கொண்ட படத்தை காசு கொடுத்து பார்க்கும் ரசிகனும் இந்து தான். மதியம் படத்தை பார்த்து சிரித்து விட்டு மாலையில் அந்த ரசிகனே பவ்யமாக பிள்ளையார் கோவிலில் தோப்புக் கரணம் போட்டு கும்பிட்டு செல்வான்.

இதை இவ்வளவு விரிவாக சொல்லக் காரணம் உள்ளது. நமது கடவுள்களை கிண்டல், கேலி செய்து விமர்சனம் செய்ய உரிமை உள்ளதாக நம்புகிறவன் இந்து. இந்த அடிப்படை உளவியலை பயன்படுத்தித் தான் கருணாநிதி மைனாரிட்டி மக்களை திருப்தி படுத்த அவ்வப்போது இந்து மக்களுக்கு எதிரான சில கருத்துக்களை சொல்லி விட்டு அத்தோடு முடித்துக் கொள்வார்.

ஆனால் அறிவாளி ஸ்டாலின் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்து மத எதிர்ப்பு தான் தன் முதல்வர் கனவை நனவாக்கும், கரை சேர்க்கும் என்று இந்துக்களை எதிர்த்து தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்திக் கொண்டு வருகிறார்.

இதன் விளைவு சமூக ஊடகங்களில் இயங்கும், சூடு சுரணையுள்ள தி.மு.க வினர் மெல்லச் சத்தமின்றி வெளியேற ஆரம்பித்து விட்டனர்.

—————–

கருணாநிதி அரசியல் சாணக்கியர் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது.

இதிலும் ஒரு விசயத்தை கவனித்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். தனக்குப் புரியாத அல்லது பிடிபடாத பல விசயங்களைப் பற்றி முடிவெடுக்கும் முன், தக்க ஆலோசனை சொல்லப் புத்திசாலிகளை தன் நெருக்கத்தில் வைத்திருந்தார்.

முரசொலி மாறன், துரை முருகன், அன்பழகன், கோ.சி மணி, ஆற்காடு வீராச்சாமி, வீர பாண்டி ஆறுமுகம்….. என ஒரு பெரிய பட்டாளமே இருந்தது. கூடவே அரசு நிர்வாகத்தை பற்றி ஆலோசனை சொல்ல IAS, IPS, பொருளாதார நிபுணர்கள், ஊடகத்துறையில் கொடி கட்டி பறந்த ஆளுமைகள்… என அனைத்திற்கும் ஒரு கூட்டத்தை தன்னைச் சுற்றி வைத்திருந்ததால் தான் கருணாநிதி என்ற மனிதர் தனது வாழ்நாளின் கடைசி வரை அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து தமிழ்நாட்டின் ஒரு அரசியல் ஆளுமையாகவும், அடையாளமாகவும் கொடி கட்டி பறக்க முடிந்தது.

ஆனால் இப்போது நிலமை தலைகீழ். திமுக வின் தலைவரான சுடலையை சுற்றி இருப்பது அனைத்தும் அல்லக்கை முண்டங்கள். மேடையில் பேச ஒரு துண்டு சீட்டை கூட சரியாக எழுதித் தர துப்பில்லாத தண்டங்களை தன் கூடவே வைத்துக் கொண்டு மேடைகளில் உளறி அசிங்கப்பட்டு நிற்கிறார்.

இதன் விளைவு…. அறுபதாண்டு பாரம்பரிய கட்சியின் தலைவரான சுடலை சமூக வலைத்தளங்களிலும், மக்களிடத்திலும் கோமாளியை விட மோசமான நிலையில் பார்க்கப்படும் நிலைக்கு வந்து விட்டார்.

இந்த கோமாளிக் கூத்துக்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் தொண்டர்கள், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், கேலி செய்வாருக்குப் பதில் சொல்ல முடியாமல் விரக்தியின் விளிம்பு நிலையில் உள்ளனர்.

———————

அறுபதுகளில் அடுக்கு மொழியில் பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்த அண்ணா காலத்தில் இருந்த அரசியல் நிலை வேறு. அன்றைய மக்களின் வாழ்க்கைத் தரமும், ஆதாரங்களும், முறைகளும் வேறு. ஆனால் மாறி வரும் காலச் சூழ்நிலையில் அரசியல் களத்தின் கவனம் என்பது ஜாதி, மதம், இனம் என்பதை தாண்டி முன்னேற்றம் என்ற திசையில் போவது எப்படி என்று யோசிப்பதில், செயல்படுவதில் உள்ளது.

இதற்கு ஒரு அடிப்படைக் காரணம் அண்ணா முதல்வரான போது சுமாராக மக்களின் கல்வியறிவு 40% கூட இல்லை. அது கூட கர்மவீரர் காமராஜர் அவர்கள் புண்ணியத்தாலேயே அந்த அளவுக்கு உயர முடிந்தது.

மக்களுக்கு தகவல் தொடர்பு எனில் செய்தி தாள்களும், ஆல் இந்தியா ரேடியோ மட்டும் தான். உணர்ச்சி பூர்வமாக, ஏற்ற இறக்கத்துடன் எதை பேசினாலும் நம்ப வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருந்தனர்.

அண்ணா துரை, ஈவிகே சம்பத், கண்ணதாசன், கருணாநிதி….. என பேச்சில் சிறந்த ஒரு பெரும் கூட்டமே மக்களை கட்டிப்போட்டு வைத்திருந்தது. அனைத்திற்கும் மேலாக எம்ஜிஆர் என்ற மக்களிடம் செல்வாக்கு பெற்ற மிகப்பெரிய பிரம்மாஸ்திரமும் அவர்கள் கையில் இருந்த்து.

இன்று திமுக என்ற கட்சியையும், அதன் தலைவர் ஸ்டாலினையும், முந்தைய கட்சி, தலைவர்களின் குழுவோடு  ஒப்பிட்டுப் பார்த்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது.

எதுகை மோனையுடன் ஏற்ற இறக்கமாகப் பேசினால் செல்லுபடியாகாது என்ற காலம் இது. தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் சமூக வலைத்தளங்கள் மூலம் உடனுக்குடன் மக்களிடம் போய் சேர்கின்றன.

அவர்களின் பேச்சுக்கள், பழைய சரித்திரங்கள், புள்ளி விபரங்களுடன் ஒப்பிடப்பட்டு அலசி ஆராய்ந்து விமர்சனம் செய்யப்படுகின்றது.

ஏனெனில் இன்று தமிழகம் கிட்டத்தட்ட முழுக் கல்வியறிவு பெற்ற மாநிலம். எந்த தலைப்பில் கூகுளில் தட்டினாலும் வண்டி வண்டியாக சரித்திரமும், புள்ளி விபரங்களும் கொட்டுகின்றன.

அரசியல் என்பது இன்று படித்த இளைஞர்களின் கைகளுக்கு சென்று விட்டது. ஒரு ஆண்ட்ராய்டு போனை வைத்து ஆதாரத்துடன் தலைவர்களின் பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் கிழித்துத் தொங்க விடுகின்றனர்.

பேச்சால் உச்சத்திற்கு சென்ற திமுக இன்று பேசினாலே விமர்சனம் செய்யப்படுவோம் என்று அச்சப்பட்டு முடங்கிய நிலைக்குப் போய் விட்டது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம், திமுக வில் இன்று சிறந்த பேச்சாளர்கள் என்று எவரும் கிடையாது. பேசினாலும் ஆதாரம், கடந்த காலச் சாதனைகளைச் சொல்ல ஆள் இல்லை. இருப்பவர்கள் எல்லாம் ஊர் பேர் தெரியாத இரண்டாம் தர மேடைப் பேச்சாளர்கள் தான்.

இந்தப் பேச்சாளர்கள் மேடை போட்டு பேசினாலும் கேட்பதற்கு மக்கள் வருவதில்லை. வருபவர்களும் குவார்டருக்கும், பிரியாணிக்கும் வரும் கூலிக்கு மாரடிக்கும் பிரிவினர் தான்.

இரண்டாம் நிலைப் பேச்சாளர்களை வைத்துக் கூட்டம் போட்டால் மைக் செட் காரரும், மேடை போட்டவரும் தான் இருப்பார்கள் என்று கூட்டத்தை ஏற்பாடு செய்யும் மாவட்ட, ஒன்றிய கட்சி நிர்வாகிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் கூட்டம் போடுவது கிடையாது.

ஆனால் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள கூட்டம் போட்டதாக ஏதாவது கணக்கு காட்ட வேண்டுமே….

தெரு முனை கூட்டங்கள் என்று தெருவில் நின்று ஒரே நாளில் பத்து இடங்களில் பேசி விட்டு போகும் அளவிற்கு தாழ்ந்து விட்டது கழகம்.

—————-

இன்னொரு முக்கியமான விசயம்.

ஹிந்தி எதிர்ப்பு என்பதை தமிழர்களின் உணர்வு பூர்வமான பிரச்சனையாக்கி அதில் அசுரத்தனமாக வளர்ந்து ஆட்சியை பிடித்த இயக்கம் தான் திமுக.

உணர்வு பூர்வமான பிரச்சனைகளுக்கு அரசியல் தளத்தில் வெகு வேகமாக எதிர்வினை புரிபவர்கள் தமிழர்கள்.

திமுக வின் மைனாரிட்டி வாக்கு வங்கி பாசத்தை இத்தனை காலம் தமிழர்கள் கண்டு கொள்ளாமல் விட்ட காரணம் அவர்களுடன் நேரடி தொடர்பில் இல்லாத கோவில்களையும், தெய்வங்களையும் மட்டுமே இத்தனை காலம் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வந்தனர்.

தில்லை நடராஜனை பீரங்கி வைத்து பிளப்போம், திருவாரூர் தியாகேசா தேரோட்டம் உனக்கு ஒரு கேடா…. என கேட்டது, ஸ்ரீரங்கம் கோவில் முன் பெரியார் சிலை வைத்தது எல்லாம் இந்துக்களுக்கு எதிரானதாக இருந்தாலும் நேரடித் தொடர்பில் இல்லாததால் அதை யாரும் பொருட்படுத்தவில்லை.

ஆனால் சிறு தெய்வங்கள் அப்படி அல்ல. சுடலை மாடன், அங்காளம்மன், அய்யனார் போன்ற தெய்வங்கள் தமிழர்களின் வாழ்க்கையாடு கலந்தவைகள். இவைகள் குல தெய்வங்களாகவும், அந்தந்த ஊர் மற்றும் கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வியலோடு கலந்த உணர்ச்சி பூர்வமான தெய்வங்கள்.

மைனாரிட்டி ஓட்டு வங்கிக்காக திமுக வளர்த்து விட்ட கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் தங்களுக்கு அரசியல் ஆதரவு இருப்பதால்….ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாக இந்த சிறு தெய்வங்களின் மீது கைவைக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த பிரச்சனை தான் இனி சுடலையின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது.

சிறுபான்மையினரின் இந்த அடாவடி ஆக்கிரமிப்பு, மதம் பரப்புதல், அதை எதிர்ப்பவர்களைக் கொலை செய்வது அனைத்தும் திமுக வின் ஆதரவால் தான் நடக்கிறது. அதை கண்டிக்கக் கூட முன்வர மாட்டார்கள் என்ற எண்ணம் மக்களின் மனதில் ஆழமாக பதிய ஆரம்பித்து விட்டது.

இது போன்ற பிரச்சனைகள் ஒவ்வொரு தாலுகாவிற்கும் குறைந்தது இரண்டாவது உள்ளன.

காவல் துறை, நீதி மன்றங்களும் திமுக வினரின் அரசியல் செல்வாக்கால் ஒரு தலைப் பட்சமாக நடந்து கொள்கின்றன என புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். தாங்கள் திமுக வால் அனாதரவாக்கப்பட்டு விட்டோம் என்ற மனக்குமுறல் மக்களிடம் வெளிப்படையாகவே தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே இந்து முன்னணி போன்ற ஹிந்துத்வா இயக்கங்களை நோக்கி நகர ஆரம்பித்து விட்டனர்.

சுடலையின் கூடவே இருந்து ஓசிச் சோறு உண்ணும் வீரமணி, சுப வீர பாண்டியன் போன்றவர்களின் பேட்டிகளும், அறிக்கைகளும் மக்களிடையே விவாதத்திற்கு வருகின்றன. அவர்களின் கருத்துக்கள் திமுக வின் கருத்துக்களாகவே மக்களால் பார்க்கப்படுகின்றன. பெரியாரிஸ்ட்களின் இந்து விரோத நடவடிக்கைகளுக்கு பலியாகப் போவது ஸ்டாலின்தான்.

ஆக மொத்தம் கூட்டி, கழித்து பார்த்தால் ஸ்டாலினின் முதல்வர் கனவிற்கு ஒட்டு மொத்தமாக சங்கு ஊதப்போவது அவருடன் இருக்கும் அல்லக்கை தண்டங்களும், ஓசிச் சோறு பெரியாரிஸ்ட்களும் தான்.

—————–

சரி, அடுத்து என்ன ஆகும் என கேட்கலாம்.
வேறென்ன ஆகும்…?!

இன்றைய திராவிடர் கழகத்தின் சொத்துக்களை வைத்துக் கொண்டு வித்தை காட்டும் இதே பிழைப்பை ஸ்டாலின் செய்வார்.

ஒரே வரியில் சொன்னால்……

வீரமணி் ஓசிச் சோறு எண் – 1,

என்றால்

மு.க ஸ்டாலின் ஓசிச் சோறு எண் – 2

 

எண்ணமும் எழுதும்

திரு பொம்மையா செல்வராஜ்

(Visited 2,948 times, 1 visits today)
Tags

One Comment

  1. Very good analysis, though in elections there will not be a major tide and loss of votes for DMK. Moment Karunanidhi died we thought DMK will split into North and South, it did not happen. Still public mood or mind is unpredictable, anti-Modi rhetoric has gained which is a very sad thing to note.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close