சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தமிழ்நாடு

சாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்

நேற்று பாமக மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தபோது ,ஒரு பெயர் மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.

 

பாமகவின் மத்திய சென்னை வேட்பாளர் டாக்டர்.சாம் பால் தான் அவர். திமுகவின் சார்பாக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை எதிர்த்து களம் காண போகும் சாம் பாலுக்கு உண்மையிலேயே பல முகங்கள் இருக்கிறது.

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பு, பின்பு, பொறியியலில் முனைவர் பட்டம் ,பின் தொடர்ந்து அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் என பட்டங்களை பெற்றவர் .

பல கல்லூரி, பள்ளிகளை நிறுவி ,சிறப்பாக நிர்வாகம் செய்து வரும் சாம் பால், பல தொழில் நிறுவனங்களையும் ஆரம்பித்து தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்.

இதை விட சுவாரசியமான மற்றொரு தகவல் அவர் தமிழ் திரைபடங்களிலும் நடித்திருக்கிறார் என்பதே. கடந்த ஆண்டு வெளியான ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தில் இவர் நடித்துள்ளார்.

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்தும் சாம், தான் எந்தவிதமான ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கங்கள் இல்லாதவர் என்று பெருமையுடன் கூறுகிறார் .

பாமகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவில் பொறுப்பு வகிக்கும் சாம், கிறிஸ்தவ நாடார் வகுப்பை சேர்ந்தவர் ஆவார்.கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி நிறுவனங்கள், உணவு கூடங்கள் தொழில் நிறுவனங்களை நடத்தி ,சென்னை தொழில் முகவர் வட்டாரத்தின் முக்கிய ஆளுமையாக வளர்ந்து வரும், பன்முக தன்மை கொண்ட சாம், பல வழக்குகளில் விசாரணையை தினமும் எதிர்கொண்டிருக்கும் தயாநிதி மாறனுக்கு கடும் சவாலான போட்டியை தருவார் என்பது நிச்சயம்.

(Visited 8,543 times, 1 visits today)
Tags

One Comment

  1. என்னது மாறனுக்கு சாவலா இருப்பாரா??

    மத்திய சென்னையை பொருத்த வரை போட்டி திமுகவிற்கும் தினகரன் அணிக்கும் தான்

    கொஞ்சமாவது களநிலவரம் அறிந்து எழுதுகப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close