உண்மைச் செய்திகளை உரக்கச் சொல்வோம்

 

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் “ஒரே இந்தியா நியூஸ்” என்ற செய்தித் தளத்தை வாசகர்கள் படித்துப் பயன்பெறும் வகையில், செய்திகளை உடனுக்குடன் தரும் வகையில் செயலாற்றத் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம்! பாரதத்தின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.

இந்தியாவின் ஜன நாயகத்தை விட்டு ஆயுதப் புரட்சியை மேற்கொள்வதே மக்களின் நல்வாழ்வுக்கான பலனைத் தரும் என்ற கோட்பாடுடைய மாவோயிச அமைப்புகளையும், நக்சல்பாரி அமைப்புகளையும், தீவிரவாத அமைப்புகளையும், மேலும் இந்தியாவின் ஒற்றுமையைக் குலைக்க முற்படும் எந்த அமைப்பாக இருந்தாலும், எவ்விதத் தயக்கமும் இன்றி தோலுரித்துக் காட்டுவோம். தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழர்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களையும் எடுத்துரைக்கும் விதத்தில் கருத்துகளையும் சிறப்புக் கட்டுரைகளையும் இத்தளம் தரும். அரசியல் செய்திகள், இந்தியா, தமிழ்நாடு மற்றும் உலக நிகழ்வுகள் பற்றிய செய்திகள், வணிகம், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா, தொழில் நுட்பம்  போன்ற பிரிவுகளில் செய்திகளை உடனுக்குடன் தர முனைகிறோம்.

இப்பத்திரிகைச் செய்திகள் பலரையும் சென்றடைய உங்களாலான உதவியையும், பேராதரவையும் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். இறைவனின் ஆசியாலும், உங்களின் பேராதரவுடனும் வெற்றிநடை போடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து வாசகர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

ஜெய்ஹிந்த்…..

-ஆசிரியர் குழு

(Visited 355 times, 1 visits today)
11+

About The Author

You might be interested in

Comment (3)

  1. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. தமிழகத்திற்கு தற்போதைய தேவை இப்படி ஒரு தேசிய எண்ணம் கொண்ட ஒரு பத்திரிக்கை/செய்தி நிறுவனம் தான்.. நடு நிலை தவறாமல் நேர்மை பிறழாமல் உண்மைகளை உரக்க சொல்ல வேண்டுகிறேன்..

    0

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *