புதுடில்லி : சபரிமலையில் ரகசியமாக சாமி தரிசனம் செய்த கனக துர்கா பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது .
பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு சென்ற பெண்களில் கனகதுர்காவும் ஒருவர். இவர் தனது வீட்டிற்கு திரும்பி சென்ற போது அவரது மாமியார் மற்றும் உறவினர்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது . இதை அடுத்து அவர் தாக்க பட்டதாகவும் செய்திகள் வெளியாகின . எனவே தனக்கு அதிக மிரட்டல் வருவதாகவும் , பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரி நிதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் . இவ்வழக்கை விசாரிக்க நீதிமன்றம் ஒத்துக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
சுப்ரீம் கோர்ட் இம்மனுவை அவசர வழக்காக நாளை (ஜன.,18) அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சபரி மலையில் பெண்கள் நுழைவது குறித்த ஹிந்து அமைப்பினரின் மேல் முறையிட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதி மன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரேஇந்தியா பற்றி நண்பரின் வலைத்தளம் மூலமாக அறிந்து முதன் முறையாக வருகிறேன் இங்கே.
சுஜாதா தேசிகன், ஹரன் பிரசன்னா போன்றவர்களின் எழுத்தை இங்கே பார்க்க நன்றாக இருக்கிறது.
பத்திரிக்கையில் எங்கும் ஆசிரியர் பெயர், பத்திரிக்கை முகவரி அல்லது மின்னஞ்சல் என்று காணப்படவில்லையே. ஏதாவது கட்டுரை எழுதி அனுப்பலாம் என நினைத்தால் எப்படித்தான் அனுப்புவது!
நான் ‘ஏகாந்தன்’ எனும் பெயரில் நாலைந்து வருடங்களாக வலைப்பக்கத்தில் எழுதிவருகிறேன்.
நன்றி.
சார் உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்