” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை
நமது ஒரே இந்தியா தளத்திற்காக, நாஞ்சில் என்று அழைக்கப்படும் அரவிந்தனின் சிறப்பு கட்டுரை. இதை முதல் பாகம் என்று கருதுவோம் .
சவுக்கு சங்கர் எழுதிய மோடி மாயை புத்தக விமர்சனத்தை, 2013 மே மாதம் அவர் பதிவிட்ட இந்த ட்வீட்டிலிருந்து தொடங்கலாம். அதாவது, 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு சரியாக ஒரு வருடம் முன்பு.
எதற்காக இந்த ட்வீட்டை ஞாபகப்படுத்தவேண்டியிருக்கிறது என்றால், பொதுவாக அனைவரும் பிரபலமானவுடன், மாற்றுக் கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்பதைத் தாண்டி, தங்கள் கருத்தை, தங்களையும் அறியாமலேயே பிறர் மேல் திணிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். அந்த வகையில் தான் மோடி மாயை புத்தகத்தையும் அணுகவேண்டியிருக்கிறது. மேலும், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அடைந்த ஏமாற்றங்கள் மட்டுமே இந்த புத்தகத்தின் வாயிலாக வெளியாகியிருக்கிறது என்றும், யாரும் தவறுதலாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவும் இந்த 2013 மே மாத ட்வீட் அவசியமாகிறது.
ஏழு பக்க முன்னுரை, நாட்டு மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்று மோடி சொன்னார் என்ற பொய் தகவலுடன் ஆரம்பிக்கிறது என்றால், மீதம் 125 பக்கங்களும் எவற்றால் நிரம்பி இருக்கக்கூடும் என்பதை எல்லாரும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சஞ்சய் நிருபம், மோடி நான்கு வருடங்களில் வெறும் 19 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்துக்கு வந்தார் என்று சொன்னதை, சரியான தகவலா என்று கூட யோசிக்காமல், இந்த முன்னுரையில் அப்படியே பயன்படுத்தி இருப்பதை, வாட்சப் புரட்டு என்று அழைக்காமல் வேறு எப்படி அழைக்க முடியும்.
மோடி ஆட்சிக்கு வந்தால் மதக் கலவரம் வரும், சிறுபான்மையினர் வாழ முடியாது என்றெல்லாம் கடந்த தேர்தலில் செய்த பொய் பிரச்சாரங்களை, மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தவிர, புதியதாக எதுவும் குறை கண்டுபிடிக்க முடியவில்லை போலும்.
வரிக்கு வரி பொய்யும், புரட்டும், மோடி மேல் இருக்கும் வெறுப்பும் வெளிப்படுகிறதே தவிர, கடந்த காங்கிரஸ் ஆட்சியை விட எந்த வகையில் மோடி தலைமையிலான ஆட்சி குறைந்துவிட்டது என்பதற்கு சரியான விளக்கங்கள் இல்லை.
பாஜகவை விமர்சிக்கும் பெண்களை, தரக்குறைவாக விமர்சிக்கும் நபர்களை மோடி பின்தொடர்கிறார் என்றொரு குற்றச்சாட்டும் முன்வைக்கிறார் சவுக்கு சங்கர்.
ப்ரைஸ்வாட்டர்ஹௌஸ் கூப்பர், பிபிசி முதலான உலகின் தலைசிறந்த நிறுவனங்களில், நிர்வாகப் பொறுப்பில் பணிபுரிந்து, இன்று நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் ஒரு பெண்மணியை, ஊறுகாய் மாமி என்றழைக்கும் சவுக்கு சங்கரின் பெண்கள் மீதான மரியாதை, இங்கே பல்லிளிக்கிறது. சவுக்கைப் பின்தொடர்பவர்கள், அவரது இந்த செய்கைக்கு எந்த விதத்தில் பொறுப்பாவார்கள் என்பதையும் அவரது கருத்துக்கே விட்டுவிடுகிறேன்.
மொத்தம் பதினாறு தலைப்புகளில் கட்டுரைகள். அனைத்தும், எப்போதும் நிரூபிக்கப்படாத, அவசரகதியில், எதையும் முழுவதுமாக விசாரிக்காமல், காங்கிரஸ் தலைவர்கள் அள்ளித் தெளித்த குற்றச்சாட்டுகளைத் தொகுத்து வெளியிடப்பட்டவையாகவே இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் தகுந்த ஆதாரங்களோடு பதில் கொடுக்க விருப்பம்தான். அவற்றில் சில, சவுக்குக்கு மட்டுமே அறிந்த ஆய்வுகள், தலைவர்களின் ரகசிய உரையாடல்களாக இருப்பதால், நாம் எட்டும் அளவில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஒவ்வொன்றாக பதில் அளிக்கப்படும்.
பாஜகவுக்கு செல்வாக்கில்லாத ஒரு மாநிலத்தில், பாஜகவைப் பற்றிய புத்தகம் ஒன்று அவசர கதியில் வெளியிடப்பட்டதற்கும், சவுக்கு அதற்கு முன் எழுதிய இந்தியாவை உலுக்கிய ஊழல்கள் என்ற புத்தகம் முழுக்க முழுக்க, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான திமுகவின் ஊழல்களைப் பற்றியே இருந்ததால் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கும், ஊழல் ஒழிப்பில் பிறந்த சவுக்கு, ஐந்து வருடங்களில் நெருப்பில் புடம் போட்ட கட்சிகளாக மாறி நிற்கும் காங்கிரஸ், திமுகவிற்கு பகிரங்க ஆதரவு அளிப்பதற்கும், எதுவும உள்நோக்கம் இல்லை என்றே நம்புவோம்.
ஊழலை ஒழிக்க பிறந்தவர் போல் காட்டிக் கொண்ட உத்தமர் ஊழல் கட்சிக்கே ஒத்து ஊதினால் ஒன்னு மோடி மீதான காரணமில்லாத வெறுப்பு..அல்லது காசுக்கு எத வேணாலும் எழுதலாம்னு நினைத்து எழுதலாம்..
இந்த புத்தகத்தை எடுதித்தரும்படி கேட்டு வாங்கி பதிப்பித்து வழங்கியவர் பத்ரி எனப்படும் மிக பிரபல சங்கி என்பது இந்த கட்டுரை எழுதியவருக்கு தெரியாமல்போனது ஆட்சரியமில்லை. பிழையான தகவல்களை பற்றி அலறும் நாதனால் சரியான தகவல்களுக்கு எந்த பதிலுமில்லை. 15 லட்சம் பொய்யாய் இருந்தால் ஏன் மோடியால் அதனை தேர்தலுக்கு முன்னர் மறுதலிக்க முடியவில்லை. இப்போது கூட அவர் அதை மறுத்து பேசவில்லையே.
நாய்கள் எங்கே எலும்புத்துண்டு கிடைக்குமோ அந்த இடத்திற்கு தான் நன்றியுடன் இருக்கும் என்பது உலக நியதி. நல்லவர் வேடம் சரியான விலை கிடைக்கும் வரைதான் என்பதை நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.