வடகிழக்கில் அழிக்கப்படும் தீவிரவாதம்
நம்மில் பெரும்பான்மையினருக்கு நமது வடமேற்கு பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை பற்றியே தெரியும். வெகு சிலரே வடகிழக்கில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளையும் பிரச்சினைகளையும் அறிந்து வைத்துள்ளனர்.
வடகிழக்கில் உள்ள அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர் என ஒவ்வொரு மாநிலத்திலும் ஓரிரு அமைப்புகள் உண்டு. நிறைய பேர் உல்பா அமைப்பை பற்றி அறிந்திருக்கலாம். சில வருடங்கள் முன்பெல்லாம் அடிக்கடி உல்பா அமைப்பினர் தாக்குதல் என செய்திகள் வரும். இப்பொழுது அவை சுத்தமாக இல்லை என சொன்னாலும், சில சம்பவங்கள் எப்பொழுதாவது நடைபெறுகின்றன.
இந்த தீவிரவாத அமைப்புகள் அனைத்துமே தங்களது முகாம்களை அண்டைநாடான மியான்மாரின் அடர்ந்த காட்டு பகுதிகளில் அமைத்துள்ளன. சில காலம் முன்புவரை அந்த நாட்டு அரசு அதை அதிகம் கண்டு கொண்டதில்லை. முகாம் இருக்கும் பகுதி அடர்ந்த காடு, அங்கே சென்று தேடுதல் வேட்டை நடத்துவது கடினம் என்றெல்லாம் சாக்கு கூற வந்தது. அதே போல் அண்டைநாடாக இருந்தாலும் நெருங்கிய ராஜீய உறவு இந்தியாவுடன் இருந்ததில்லை. ஆனால் 2014க்கு பிறகு இது மாறியது. மியான்மாரில் பல கட்டிடங்கள், வசதிகளை இந்தியா செய்து தந்தது. மேலும் அவர்கள் மாணவர்கள் இங்கு வந்து கேந்திரிய வித்யாலயத்தில் படிக்கவும் அனுமதித்தது.
இதன் விளைவாக, இந்தியா 2015ல் அவர்கள் எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்த பொழுதும் மியான்மர் அரசு எதிர்க்கவில்லை. இப்பொழுது இன்னும் ஒரு படி மேலே சென்று மியான்மர் இராணுவம் டாகா பகுதியில் உள்ள தீவிரவாத இயக்கங்களின் முகாம்களை அழித்துள்ளதாக தகவல் வருகிறது. இங்கு NSCN(K), ULFA(I) மற்றும் சில மணிப்பூர் தீவிரவாத அமைப்புகளின் முகாம்கள் செயல்பட்டு வந்தன. இப்பொழுது அந்த முகாமகள் முழுமையாக அழிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் மியான்மர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பட்டுள்ளதால் வடகிழக்கில் தீவிரவாதம் முழுமையாக ஒழிக்கப்படுவதற்கான வாய்ப்ப அமைந்துள்ளது.
ஆதாரம் : http://idrw.org