அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் – நிறுவன நாள் – ஜூலை 9
நமது தேசம் அன்னியர் ஆட்சியின் கீழ் இருந்த காரணத்தால் இந்த தேசத்தின் மாணவர்களுக்கு நமது பெருமையும் புகழும் மறந்தே போய்விட்டன. மீண்டும் இந்த பாரதம் தேசம் உலகின் குருவாக விளங்க வேண்டும் எனில் இன்றைய மாணவர்கள் தேச பக்தியுடனும் தேச ஒற்றுமையுடனும் விளங்க வேண்டும். அதற்கான ஏற்பாடு அரசாங்கத்தின் சார்பில் செய்யப்படவில்லை.1948 -ம் ஆண்டு முதல் மாணவர்களிடத்தில் தேசபக்தியை வளர்க்க தேவையான முயற்சிகளை சில தலைவர்கள் முன்னெடுத்தனர். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ பி வி பி) ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் 1949 ஜூலை 9இல் தான் முறைப்படி பதிவு செய்யப்பட்டது . அந்த ஆண்டே நாடு முழுவதும் இந்த இயக்கம் பரவியது.
1948 -ம் ஆண்டு அக்டோபர் முதலே தமிழகத்தில் இந்த இயக்கத்தின் பணிகள் துவக்கப்பட்டது. இன்று இந்த இயக்கம் உலகின் மிகப்பெரிய மாணவர் இயக்கமாக திகழ்கிறது. அறிவு , ஒழுக்கம், ஒற்றுமை – என்ற தாரக மந்திரம் ஏபிவிபி-ன் கொள்கை. சுவாமி விவேகானந்தர் கூறிய ஆன்மிகம் மற்றும் தேசபக்தி சிந்தனையுடன் செயல்பட்டு வரும் இயக்கம் ஏபிவிபி. 3 மில்லியன் எண்ணிக்கையை விட அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ள ஒரே பெரிய மாணவர் இயக்கம் ஏ பி வி பி தான். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 9-ஆம் நாள் ஏபிவிபி நிறுவப்பட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தேசிய மாணவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த இயக்கம் ஆரம்பித்து 71 வருடங்கள் ஆகிவிட்டன. “மாணவர் சக்தியே தேசிய சக்தி” என்னும் பிரதான முழக்கத்தோடு கடந்த 71 வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிறது ஏபிவிபி. தேசிய புனரமைப்பு மற்றும் தேசத்தை கட்டமைத்தல் இவைதான் ஏ பி வி பி-யின் லட்சியம். இந்த இயக்கத்தின் ஓங்கி ஒலிக்கும் சுலோகம் “இன்றைய மாணவர்கள் இன்றைய குடிமகன்கள்”. இதனடிப்படையில் உயர்கல்வித் துறையில் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடத்தில் தேசபக்தியை வளர்த்து வருகிறது. இதன் மூலம் நாட்டிற்கு தேவையான தேசப்பற்றுள்ள இளைஞர் சக்தியை உருவாக்கி வருகிறது. தேச பக்தி என்பது வெறும் பேச்சில் மட்டும் அல்ல செயலிலும் இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த மாணவர் இயக்கம் பல்வேறு சமுதாயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ஏபிவிபி-ன் களம் கல்லூரி வளாகங்கள் தான். இதன் செயல்பாட்டாளர்கள் மாணவர்கள் மற்றும் வழிநடத்துபவர்கள் ஆசிரியர்கள்.
பிரிவினைவாத சக்திகள் இந்த தேசத்துக்கு எதிராக செயல்படும் போதெல்லாம் அங்கு ஏபிவிபி வலிமையோடு எதிர்த்துப் போராடி வந்துள்ளது. “இந்த தேசம் ஒன்றுபட்ட தேசம்” “இந்த தேசம் நம் அனைவருக்கும் தாய்” -இத்தகைய உன்னதமான லட்சியத்தோடு தேசிய உணர்வை மாணவர்களின் மனதில் விதைத்து வருகிறது. இதன் மூலம் இந்த பாரத தேசத்தை நேசிக்கின்ற போற்றுகின்ற மதிக்கின்ற நல்ல குடிமகன்களை ஏபிவிபி உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது. தேசபக்தி உள்ள ஒவ்வொரு ஏபிவிபி மாணவனும் இந்த தேசத்திற்காக தியாகம் செய்ய தயாராக இருப்பான். தனது வாழ்நாளில் தனது நேரத்தை தேச வளர்ச்சிக்காக ஒதுக்கித்தர வேண்டும் தியாகம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உணர்வு ஒவ்வொரு ஏபிவிபி மாணவன் இடத்திலும் காணமுடியும். கல்வி நிலையங்களில் மாணவர்களுக்காக ஏபிவிபி பரிந்து பேசம் மாணவர் நலனுக்காக போராடவும் செய்யும்.
ஏபிவிபி எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து இல்லை. இது ஒரு தன்னாட்சி இயக்கம். அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆசிரியர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்ட இது ஒரு கல்வி குடும்பம். தொழில்நுட்ப மாணவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், சட்டக் கல்வி மாணவர்கள் , ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் போன்ற துறவாரியான மாணவர்களை ஒருங்கிணைக்க ஏபிவிபி-ல் பல்வேறு தளங்கள் உள்ளன. IIT போன்ற கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்களுக்காக THINKINDIA , சட்ட கல்லூரி மாணவர்களுக்காக FOTLAW , மருத்துவ கல்லூரி மாணவர்களுக்காக MEDIVISION , ஆயுர்வேத கல்லூரி மாணவர்களுக்காக JINGASA ,தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்காக SETINDIA போன்ற பேரவைகள் (FORUM) மூலம் செயல்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள் தனது சமுதாயத்தில் உள்ள மக்களின் வாழ்வை நேரடியாக உணர வேண்டும் என்ற நோக்கத்தில் SOCIAL INTERNSHIP என்ற பெயரில் கிராம மற்றும் ஏழைமக்களை சந்தித்து அவர்களோடு உரையாடி அவர்களின் வாழ்வை பதிவு செய்யும் பயிற்சிகள் கோடை விடுமுறையில் நடத்த படுகின்றன. மாணவர்களின் படைப்பாக்கத் திறன்களை வெளிக் கொண்டு வந்து நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் TECHNICAL EXPO நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் தேசம் முழுக்க ஏபிவிபி நடத்தி வருகிறது. இதுவரை எண்ணற்ற சமுதாய தலைவர்களை, தேசிய அரசியல் தலைவர்களை ஏபிவிபி நாட்டிற்கு தந்துள்ளது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வெகுஜன இயக்கமாக ஏபிவிபி திகழ்கிறது என்றல் மிகை அல்ல.
தேசத்தை நேசிக்கும் மாணவர் படையை உருவாக்க ஏபிவிபி இயக்கத்தை நாம் அனைவரும் ஆதரிப்போம். தேசிய சக்தியை வலுப்படுத்துவோம்.
ஜெய் ஹிந்த்