அணி மாறுகிறார் அஸ்வின்
ஐபிஎல் டி20 டோர்னமெண்ட்டில் அஸ்வின் கிங்ஸ் லெவன் அணிக்காக கடந்த இரு வருடங்களாக ஆடி வருகிறார். அதன் கேப்டனும் அவர்தான். ஆனால் கேப்டனாக அவர் தனது முழுத் திறனை வெளியிடவில்லை என அணி நிர்வாகம் கருதுகிறது. அணி நிர்வாகத்தையும் குறை சொல்ல இயலாது. இத்தனை வருட ஆட்டங்களில் அவர்கள் தகுதி சுற்றுக்கு தேர்ச்சி பெற்றதும் இல்லை கோப்பையை வென்றதும் இல்லை. என்றுமே வெல்லும் அணியைதான் அனைவரும் விரும்புவர்.
2018ல் அவர் கேப்டனாகிய வருடம் அனைத்துப் போட்டிகளின் இறுதியில் 8 அணிகளில் ஏழாவதாக இருந்த கிங்ஸ் லெவன் 2019ல் ஒரு படி முன்னேறி ஆறாவதாக இருந்தது.எனவே அணி நிர்வாகம் அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் வேறு இரண்டு டெல்லி வீரர்களுக்காக இவரை மாற்றிக் கொள்ள கிங்ஸ் லெவன் அணி நிர்வாகம் ஒத்துக் கொண்டுள்ளதாக பெயர் சொல்ல விரும்பாத பி சி சி ஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
என்னதான் கேப்டன் நன்றாக இருந்தாலும் அணியில் இருக்கும் மற்ற வீரர்களும் சிறப்பாக ஆட வேண்டும். இதற்கு புனே அணி நல்ல உதாரணம். கேப்டன் மாற்றமாவது கிங்ஸ் லெவன் அணிக்கு நல்ல பலனை அளிக்கிறதா எனப் பார்ப்போம்.