தனி நபர் உரிமை மறுக்கப்பட்ட தேசம் – கியூபா : பகுதி -5 – ராமலிங்கம்
புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த பிடல் காஸ்ட்ரோ உண்மையில் கியூபாவை உலகின் முழு முதல் தற்சார்புடைய நாடாக மாற்ற, அமெரிக்காவின் உதவியின்றி தனிப்பெரும் பொருளாதாரம் கொண்ட நாடாக்க வேண்டும் எனக் கடுமையாக உழைத்தார். ஒருபுறம் சோர்வடைந்த மக்கள், மறுபுறம் அமெரிக்காவின் பொருளாதாரத்தடை என பல சவால்களை எதிர்கொண்டிருந்தார். துப்பாக்கி தூக்கிச் சுறுசுறுப்பாக சண்டையிட முடிந்த சக போராளிகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஜனநாயக அரசியல், செங்கோலை பிடித்து நல் ஆட்சிக்கு துணைபுரிவது, மக்கள் தேவையை உணர்ந்து முன் திட்டமிடல், சரியாக நிறைவேற்றுவது என்பது சவாலான, சோர்வை தரும் ஒரு விடயமாகவே இருந்தது. சக போராளிகளே எதிர்க்குரல் எழுப்பத் துவங்க, மறுபுறம் அமெரிக்காவின் உளவுத்துறை எப்படியும் பிடல் அப்புறப்படுத்தப்படவேண்டியவர் என தூக்கம் மறந்து செயலாற்றிக்கொண்டிருக்க, சர்வாதிகரமே நாட்டையும் தன்னையும் காக்கும் என நம்பும் முடிவுக்குத் தள்ளப்பட்டார் பிடல்.
இதன் முடிவு, கலகக்குரல் எழுப்பிய அனைவரும் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டனர். வெளிநாட்டவர் கியூபாவுக்குள் நுழைய பல தடைகள் என 50 வருட அரசியலில் ஒருசில துறைகளைத் தவிர சொல்லிக்கொள்ளும் படி மக்களின் வாழ்வு முறை, நாட்டின் பொருளாதாரம் என முக்கியத் துறைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. தரையில் தவழும் குழந்தை எழுந்து நடக்க நின்று கொண்டிருப்பவனின் உதவி கண்டிப்பாகத் தேவை என உணர்ந்த பிடல் அவர்களே தன் இயலாமையை பிற்காலத்தில் பதிவு செய்திருக்கிறார். அவை,
1. நீங்கள் ஏன் தாடியை வெட்டிக்கொள்வதில்லை என கேட்ட நிருபரிடம் பிடல் காஸ்ட்ரோ இப்படி சொல்கிறார், “நல்ல அரசாங்கத்திற்கான எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றும்போது நான் தாடியை வெட்டுவேன்.” என்ற பிடல் 2016-ல் தான் இறக்கும் வரை தாடியை வெட்டிக்கொள்ளவில்லை.
I’m not thinking of cutting my beard, because I’m accustomed to my beard and my beard means many things to my country. When we fulfill our promise of good government, I will cut my beard.” — Castro in a 1959 interview with CBS’s Edward Murrow, 30 days after the revolution.
2. ஒரு கட்டத்தில் புரட்சியின் வெற்றியை நியாயப்படுத்தவேண்டி, கல்லூரி பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட வேலைவாய்ப்பின்றி விபச்சாரம் செய்யும் சூழ்நிலையைக் கூட கம்யுனிசத்தின் வெற்றியாக அறிவிக்கவேண்டிய நிலையில் இருந்தார் பிடல். ஆனால் உலகம்தான் கைக்கொட்டி சிரித்துவிட்டது.
“One of the greatest benefits of the revolution is that even our prostitutes are college graduates.” — Castro to director Oliver Stone in 2003 documentary “Comandante.”
3. கம்யுனிசத்தைத் தேர்ந்தெடுத்தது தவறான பாதை என்ற கருத்தை ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்கிறார், “பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். நாங்கள் செய்த அனைத்து பிழைகளுக்கிடையில், எல்லாவற்றிலும் மிகப் பெரியது, யாரோ ஒருவர் சொல்வதை வேதவாக்காக நம்பி எவ்வாறு சோசலிசத்தை உருவாக்குவது என்று நாங்கள் செயல்பட்டது தான். அவர்கள் சொன்ன அனைத்தையும் அதுதான் சூத்திரம், அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நாங்கள் நினைத்தோம்”. – 2005 இல் பிடல் சொன்னது. இதில் சோசலிசம் என்பது கம்யுனிசத்தை தான் என்றாலும், “அவர்கள் சொன்ன சூத்திரம், யாரோ சொன்னது” என்பதெல்லாம் யாரை குறிக்கிறது? மார்க்ஸ்/ ரஷ்யா/ சீனா லெனின்/ ஸ்டாலின்/ மாவோ? யார் என்பதை கடைசிவரை தெளிவுபடுத்தவில்லை. ஆனால் மிகத் தெளிவாக நாம் புரிந்துகொள்ள முடிவது என்னவென்றால், தனது புரட்சி வெற்றியின் மூலம் தான் கனவு கண்ட கியூபாவை உருவாக்க முடியாமலே சென்று சேர்ந்தார் பிடல்.
“Here is a conclusion I’ve come to after many years: among all the errors we may have committed, the greatest of them all was that we believed that someone … actually knew how to build socialism. … Whenever they said. ‘That’s the formula,’ we thought they knew.” Castro in 2005.
4. “கியூபன் மாடல் என்பது இனி எங்களுக்கே கூட வேலை செய்யாது” – 2010 இல் பிடல் அமெரிக்க பத்திரிகையாளர் Jeffrey Goldberg க்கு கொடுத்த பேட்டியில் சொன்னது.
தொடர் உள்நாட்டு அரசியல் அழுத்தங்களுக்கு பின், சில நாட்களில் பிடல் இதுபற்றிய தன்னிலை விளக்கம் கொடுத்தார். தனது அந்தக் கருத்து நாட்டின் அப்போதைய சூழலில் இருந்து எடுக்கப்பட்டது என்றார். 2008 -லேயே பிடல் பதவியை ராஜினாமா செய்து தம்மை அரசியலிலிருந்து முழுமையாக விலக்கிக்கொண்டார் என்பதைக் கவனத்தில் கொண்டு பார்த்தால், இதில் உள்ள உண்மையும் புரியவரும்.
“The Cuban model doesn’t even work for us anymore.” — Castro in 2010 during an interview with U.S. journalist Jeffrey Goldberg. Castro later said his comment was taken out of context.