திரிபுரா: வடகிழக்கு மாநிலங்கள் சொந்த வளங்களால் முன்னேற வேண்டும் என்று 5 வது நிதிக்கமிட்டியின் தலைவர் நந்த கிஷோர் சிங் தெரிவித்துள்ளார். நிறைய தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டமுட வேண்டும்.
மத்திய அரசு வடகிழக்கு மாநிலங்கள் தங்களது சொந்த வளங்களால் முன்னேற மத்திய அரசு திட்டங்களை வகுத்துள்ளது, அது எதிர்காலத்திலும் தொடர வேண்டும். அஸ்ஸாமிற்கு அடுத்து அதிக நெருக்கடி உள்ள மாநிலம் திரிபுரா தான். புதிய திரிபுரா அரசும் தங்கள் மனித வளத்தை வைத்து முன்னேறுவதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறது.
நந்த கிஷோர் சிங் கூறுகையில், கடந்த இரு நாட்களாக திரிபுரா அரசு, கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றுடன் கலந்துரையாடினோம். திரிபுராவை சிட்டகாங் துறைமுகத்தோடு இணைத்தால், அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் மருத்தவ வசதிக்காகவும் வந்து செல்ல ஏதுவாக இருக்கும் என்ற ஆலோசனையை திரிபுரா அரசு தெரிவித்துள்ளது.
திரிபுராவின் புதிய முதல்வரான பிப்லப் குமார் தேபின் கனவே, திரிபுராவை மென்பொருள் நிறுவனங்களின் மையமாக மாற்ற வேண்டும் என்பதே. புதிய அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதால் திரிபுரா எளிதில் முன்னேறும் வாய்ப்புகள் உள்ளன என்றார்.