இந்தியாசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

நான் பாரதீயன் ( நான் இந்தியன் ) – கே.கே.முகமதுக்கு பத்ம விருது

 

கரிஞ்சமண்ணு குழியில் முகமது என்ற முழு பெயர் கொண்ட கே.கே.முகமதுக்குஇந்த ஆண்டு பத்மா ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொல்லியல் துறையில்  பல்வேறு  பொறுப்புகளில் ,பல அகழ்வாராய்ச்சி  முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில்  பணியாற்றி  இறுதியில் வடக்கு மண்டல இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் முகமது. தற்போது ஆகா கான் அறக்கட்டளையின் இயக்குனராக பணிபுரிகிறார்..
இவரது சுய வரலாறு புத்தகத்தை அவரது தாய் மொழியான மலையாளத்தில் ”  ஞான் என்ன பாரதீயன் ” என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.தமிழில்  அதன் பொருள் ” நான் என்னும் இந்தியன் “.
இந்த பாரத தேசத்தின் புகழ் பெற்ற சரித்திர முக்கியதுவம் வாய்ந்த இடங்களை அகழ்வாராய்ந்து குழுக்களில் பணியாற்றிய முகமது  ,இந்த பாரத தேசத்தின்  இந்தியாவின் கலாச்சார ,பண்பாட்டு சின்னங்களில் பெருமிதம் கொண்டவர்.
ராமர் அவதரித்த இடமான அயோத்தியில்  , ராமர் கோவில்- பாபர் மசூதி  பகுதியை அகழ்வாரும் குழுவில் இடம் பெற்ற முகமது   தனது முக்கிய அகழ்வாராய்ச்சி முடிவுகளை  தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இவரது தலைமையிலான வல்லுநர் குழு, பாபர் மசூதியின் அடியில் இந்து கோவிலொன்றின் 14 நிலை தூண்கள் உள்ளனவென்றும் அது 11ம் நூற்றாண்டு அல்லது 1ம் நூற்றாண்டை  சார்ந்தது எனவும் குறிப்பிடுகிறார்.
ராமர்  கோவில் விவகாரத்தில்   இடது சாரி வரலாறு ஆய்வாளர்களான இர்பான் ஹபீப் ,ரொமிலா தாப்பர் ஆகியோர் எவ்வாறு  அடிப்படைவாத  இஸ்லாமிய அமைப்புகளுடன் சேர்ந்து ,நாட்டு மக்களை தவறான பாதையில் கொண்டு சென்றதவாகவும் குற்றம் சாட்டுகிறார் . ராமர் கோவில் – பாபர் மசூதி பிரச்சனை எப்போதே முடிவு காணப்பட வேண்டிய ஓன்று என்றும் , இந்த இடது சாரி ஆய்வாளர்கள் தந்த தவறான தகவல்களை  அலகாபாத் நீதி மன்றதுக்கு தந்து சுமூக தீர்வை எடுக்க தடை செய்ததாகவும் கடுமையாக சாடுகிறார்.
சர்ச்சைக்குரிய அந்த இடத்தை முஸ்லிம்கள் இந்துக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் இந்துமதமே இந்த காலங்களில் சிறந்த மதம் என்பதே இவரது கருத்தாகும்
(Visited 228 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close