சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தமிழ்நாடு
தமிழகம் மோடியை வெறுக்கிறதா ? உண்மை என்ன

நேற்று சென்னையை அடுத்த வண்டலூரில் தேசிய ஜனநாயக கூட்டணிகட்சிகள் சார்பாக பிரமாண்டமான பொது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்த கட்டுரையாளரும் ஒரு பார்வையாளராக சென்றதன் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
திராவிட கட்சிகளுக்கு பெரும் திரளான மக்களை ஒரே இடத்தில் கூட்டுவது என்பது கை வந்த கலை .எல்லாருக்கும் தெரிந்தது போல ,பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பெருமளவில் பேருந்துகளில் கொண்டு வரப்பட்டுள்ளனர். .மிழகத்தில் இரு கழகங்களும் தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் கிளைகளை கொண்டிருப்பதால் இது எப்போதும் சாத்தியம் தான்.
நேற்று நடந்த இந்த கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் என்று சொல்லப்பட்டாலும் ,அங்கே பெரும்பாலான தொண்டர்கள் அதிமுகவை சேர்ந்தவர்களாக தான் இருந்தனர். ஆளுங்கட்சிக்கே உண்டான வாய்ப்புகள் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக ,பாமக கட்சியினர் . கூட்டம் நடந்த சுற்று வட்டார பகுதிகளில் வன்னியர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இதுவும் பெரிய விஷயமில்லை.
குறிப்பிடத்தக்க அளவில் பாஜகவினர் வந்திருந்ததைக் காண முடிந்தது. அவர்களாகவே சுய விருப்பத்தின் காரணமாக வந்திருப்பார்கள் என்பதை யாரும் சொல்லாமே ஊகிக்க முடியும்.
ஆனால் இந்த மக்கள் கூட்டம் வழக்கமான திரவிட கட்சிகளின் கூட்டங்களில் வந்து, சென்று, கலைந்து செல்லும் கூட்டம் இல்லை என்பதை அங்கே முழு கூட்டமும் முடியும் வரை இருந்ததன் மூலம் சொல்ல முடிகிறது.

நேற்றைய கூட்டத்தின் பெரும்பாலான மக்கள், மோடி என்னும் மனிதரை காணவும்,அவருடைய பேச்சைக் கேட்கவும் கூடிய கூட்டம் என்பதை ,பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் வந்திறங்கும் கணத்தில் எழுப்பபட்ட ஆரவார ஒலியில் இருந்தே உணர முடிந்தது.
மோடி மேடையில் தோன்றியதும் எப்போதும் பாஜக மேடைகளில் மட்டுமே ஒலிக்க கூடிய ” பாரத் மாதா ஹி ஜே ” நேற்றைய மேடையிலும் சொல்லப்பட்டபோது, அங்கே கூடியிருந்த மக்களும் பாரத் மாதா ஹி ஜே என்ற சொன்னதும் அங்கே நடந்தது.
பெரும்பாலானவர்கள் மிக கவனமாக மோடியின் உரையை ,ஹச்.ராஜாவின் மொழிபெயர்ப்பை கவனமாகவே கேட்டுக்கொண்டிருந்தனர்.
மோடி தனது பேச்சை ஆரம்பிக்கும்போதும் ,முடிக்கும்போதும் மக்கள் கவனம் அனைத்துமே மேடையை நோக்கியோ அல்லது அங்கங்கே வைக்கப்பட்டிருந்த டிவிகளிலுமே இருந்ததை கூட்டம் நடந்த மைதானத்தை முழுவதும் சுற்றி வந்ததன் மூலம் காண முடிந்தது .
பல ஊருகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தாலும், மாற்று கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும்,சமூக ஊடகங்களிலும், டிவியில் வரும் பத்திரிகையாளர்களும் பேசும் பொது கருத்தான ” மோடியை தமிழக மக்கள் வெறுக்கிறார்கள் ” என்பதற்கான எந்த சுவடையும் நேற்றைய மக்கள் கூட்டத்தில் காண முடியவில்லை என்பதே யதார்த்தமான உண்மை.
(Visited 250 times, 1 visits today)
+11