அமீரகத்தில் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற டுவெண்ட்டி டுவெண்ட்டி கிரிக்கட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இப்போட்டிகளை இந்தியாவில் உள்ளவர்களும் கண்டு களிக்கும் வைகையில்,தயாரித்து ,ஒளிபரப்பும் உரிமையை ஐஎம்ஜி ரிலையன்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தது.
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் , ஐஎம்ஜி ரிலையன்ஸ்நிறுவனம் இந்த போட்டிகளை ஒளிபரப்பும் பொறுப்பில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளது .
2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக், இது நான்காவது சீசன் ஆகும் .போட்டிகள் கடந்த வாரம் ஐக்கிய அமீரகத்தில் தொடங்கியது. கடந்த 2017 ஆம் நடந்த சீசனில் பாதுகாப்பு குறைபாட்டை சுற்றிக் காட்டி பாகிஸ்தானில் நடந்த போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று வெளிநாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் விலகியது குறிப்பிடத்தக்கது . இந்த முறையும் 8 போட்டிகளை கராச்சி ,லாகூரில் 8 போட்டிகள் நடக்க இருக்கிறது .