பாகிஸ்தானில் பலோஜிஸ்தான் மாகாணம் மிகவும் பின் தங்கிய பகுதியாகும் .இந்த மாகாணத்தில் பல்வேறு போராட்ட குழுக்கள் ,தங்கள் பகுதிக்கு தனி நாடு வேண்டி பல ஆண்டுகளாக போராடி வருகின்றன.
தற்போது பல்வேறு போராட்ட குழுக்கள் ஒன்றிணைந்து ,அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி பெரும் சேதங்களை உண்டாக்குவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் சீனா பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை (CPEC) பாதைஎன்னும் பகுதியில் பலோஜிஸ்தான் போராட்ட குழுக்கள் சேர்ந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 9 வீர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் இருந்து வரும் செய்தி நிறுவனங்கள் உறுதி செய்கின்றன .
இந்த தகவலை பலோச் ராஜி அஜோய் சங்கார் (BRAS) என்ற போராட்டக்காரர்களின் கூட்டமைப்பும் தாங்கள் தான் தாக்கினோம் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பலோச் போரட்ட குழுவானது , இந்த பகுதியில் இருந்து சீனா
வெளியேற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது
(Visited 48 times, 1 visits today)