சென்னை: இன்று சென்னை கிரௌன் பிளாசா ஹோட்டலில் அதிமுக தலைவர்களை ஓபிஎஸ் ஈபிஎஸ் ஐ பாமக நிறுவனத்தலைவர் ராமதாசும் , அன்புமணி ராமதாசும் தற்போது சந்தித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 7 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்க உள்ளது.
அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், லோக்சபா தேர்தலில் அதிமுகவும் பாமகவும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பாமகவுக்கு 7 லோக்சபா சீட்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்படுகிறது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாம.க., ஆதரவு அளிக்கும் என்றார்.
பின்னர் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், அதிமுக – பாமக கூட்டணி., மக்கள் நலகூட்டணி, மெகா கூட்டணி. எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே கூட்டணி வைத்துள்ளோம். அந்த கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் வழங்கியுள்ளோம் என்றார்.