இன்று பிரதமர் மோடி பிராயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் கலந்து கொண்டு கங்கை நதியில் நீராடி இறைவனை வணங்கினார்.
அவரே இந்த தகவலை புகைப்படத்துடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்
சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் தொடர்பாளர்களை கொண்டவர் பிரதமர் மோடி.அவரது கும்பமேளா புகைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது வரும் நிலையில் , தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அந்த புகைப்படங்களை சுட்டி காட்டி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இவரது பெயர் சோனியா அருண்குமார்.
பிரதமர் ஆற்றிலேயே அடித்துச் செல்லப்பட்டு வேண்டும் என்று தான் விரும்புவதாக கொடுமையான ஒரு கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவர் நடிகர் சிவ கார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான 24AM ஸ்டியோவின் முக்கிய நிர்வாகியாக பணிபுரிவதாக அவரது மின்னஞ்சல் முகவரி மூலமாக அறிய முடிகிறது.
இந்த வகையான வெறுப்பை ஏற்படுத்தும் கருத்தை தெரிவித்துள்ள தனது அலுவலக பணியாளர் மீது சிவ கார்த்திகேயன் நணவநடவடி எடுப்பாரா என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்வி கேட்கின்றனர்.