ஆன்மிகம்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

மத மாற்றம் ஒரு தேசிய அபாயம் – செல்வசுந்தரி

உலகின் எல்லா நாடுகளுக்கும் ஒவ்வொரு மதம் உண்டு. பாரததேசத்தில் கிறிஸ்தவமும் இஸ்லாமும் தோன்றாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது நமது இந்து மதமாகும்.  ஆனால் நமது பாரத தேசத்தை  இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு நாடுகளும் கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும்  கங்கணம்   கட்டிக்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது.  இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம் மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றது. உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம் நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது போக மூன்றாம் நூற்றாண்டில் அதே நிலை வலுவான ஆசியா கண்டத்திலும் ஏற்பட்டது.  இவ்வாறு மதம் மாற்றும் தொழில் செய்ய காசுக்கு விலை போன இந்தியர்களையே மிஷனரிகளாக உருவாக்கினர்.  அனைத்து நாடுகளிலும் இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு  ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று பாருங்கள் அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி 78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%, கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென் ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%. இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ  அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க முடிந்தது. ஆனால் பாரத  தேசத்தில் நீண்ட நெடுங்காலமாக பாரம்பரியமான பண்பாடும் கலாச்சாரமும்  வாழ்வியல் தர்மங்களும் ஒழுக்கம் நெறிமுறைகளும்  கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இங்கேயே இவ்வளவு வேகமாக காசுக்கு விலைபோன நம் இந்தியர்களைக்கொண்டே கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய *4000 *மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து வருகின்றனர்.

சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில் கிறிஸ்தவர்களே கிடையாது.  இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2 லட்சம்.  அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 பேர் மட்டுமே  கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள்,  இன்று 12 லட்சம் பேர். அங்கு சர்சுகள் மட்டும் 780 தற்போது உள்ளது. இது போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் தீவிரமாக மதமாற்றம் நடைபெறுகிறது.  ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட வேண்டும் என்ற இலக்கில் மத மாற்று வியாபாரம் ஜரூராக  நடைபெற்று வருகின்றது. இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகின்றது என்கிறது புள்ளிவிபரம். 180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள் கட்டுரைகள் புத்தகங்கள் ஆகியவை 300  மேற்பட்டமொழிகளில் அச்சிடப்பட்டு  விநியோகிக்கப்படுகின்றன.

அவற்றில் பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள் கிறிஸ்தவத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகமாக உள்ளது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள் கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும்  அவற்றை நடத்துபவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாக்கப்பட்டிருந்தனர். இன்று 65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளனர். இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே நடத்தப்படுகிறது.  சுக போகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.

மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது. நம் சொந்த கடவுளரை இழிவு படுத்த நம் கண்னை நம்   விரல்களையே பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை அப்பாவிகளாகவும் முட்டாளாகவும்  ஆக்கியுள்ளனர்.  இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த  தர்மத்தைக்  கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையும் கடமையும் கூட. இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி இஸ்லாத்தில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.  ஆனால் அதே ராமர் பால பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை அவமதித்துப் பேசினார். இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல். வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்து தர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது  ஏன்? அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்க முற்ப்படுகிறார்கள். இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல்.

தரங்கம்பாடி கடற்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த சிவன் ஆலயம்  இடிக்கப்பட்ட நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும் பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது.  ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாக தேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக் காக்கவும் அரசு முன்வரவில்லை.  அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமது செல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றனர்.  பழமையின் சின்னம் என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை இந்த சிவன் கோவில் மேல் ஏன் காட்ட மறுக்க வேண்டும். இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல்.

மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும் வாங்கிக் குவிக்கும் வேலையில்  நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில் நிலங்களை விற்று பல ஆயிரம் கோடிகளை பார்த்து விடுகின்றனர். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின் வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வதில்லை. இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல்.

குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் , பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள் மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள்தொகை பெருகினால் பரவாயில்லையாம். இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல்.

இந்தியாவில் தினம் கோடிக்கணக்கான கோவில் வருவாய் முழுவதையும்  அரசு எடுத்துக்கொள்கின்றது.  ஆனால் மற்ற மத வருவாயை இவ்வாறு அரசு எடுக்க எவனும் துணிவதில்லை.

வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட்  திருடன் போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா கார் என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும் அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.

நாம் என்ன செய்கிறோம் ஒழக்க நெறிமுறையுடன்  கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே வைத்திருக்கிறோம்.  அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம்.

இன்று இந்தியாவில் இருக்கும் மதமாற்றிகள் அனைவரும் ஆசையினாலும்  பணத்துக்காகவும் மதம் மாற்றப்பட்ட இந்துக்களின் சந்நதியினரே. அவர்களை விட்டுவிடுவோம்ஆனால் அந்த கொடிய நோய் கொடிய விஷம் நம்மை பற்றாமல் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்வோம்.

இந்துக்களாக ஒன்றிணைவோம்.நமது சவால்களை சாதனைகளாக மாற்றுவோம். ஆட்சி அதிகாரத்திற்காக இந்துக்களை கேவலப்படுத்தி ஒழிக்க நினைக்கும் ஆட்சியாளர்களை இனம் கண்டு புறக்கணிப்போம்.

– செல்வ சுந்தரி

(Visited 665 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close