கடந்த டிசம்பரில் இந்தியாவில் மீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. வைரமுத்து, மத்திய அமைச்சர் அக்பர், பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் , நானா படேகர் என பலரும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
அதேபோல இயக்குனர் ஆர்க்ய பாஸு என்ற இயக்குனரும் மீடு தாக்குதலில் சிக்கலுக்கு உள்ளாகினார். பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளான இவருக்கு அவரது குடும்பத்தார் கவுன்சிலிங்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் தன்மீது எழுந்த புகாரில் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான இவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மார்ச் 1 அன்று தற்கொலை செய்த இவரை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவத்தனர் மருத்துவர்கள்.
(Visited 42 times, 1 visits today)