இந்தியாசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

ஆட்டம் காண்கிறது அமேதி வாய்ப்பு – வயனாட்டில் ராகுல் போட்டி?

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி அமேதியை விட்டு விலகி கேரளா வயநாட்டில் போட்டியிடுவதே நல்லது என்று வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மஜீத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டைம்ஸ் நவ் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள விடியோவில் மஜீத் இப்படி சொல்லியிருக்கிறார்.

அமேதி பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி, குறிப்பாக நேரு குடும்ப வாரிசுகள் வெற்றி பெற்று வந்த தொகுதி. அவர்கள் போட்டி போடாத நிலையில் 1998ல் பாஜகவைச் சேர்ந்த சஞ்சய் சிங் வென்றார். மற்றபடி தொகுதி அமைக்கப்பட்ட 1967ல் இருந்து காங்கிரஸ் வென்று வந்துள்ளது. 1977ல் எமர்ஜென்சிக்குப் பிந்தைய தேர்தலில் ஜனதா கட்சி வென்றது. பிறகு 1998 வரை காங்கிரஸ் பிறகு 1999ல் இருந்து 2014 வரை காங்கிரஸ் வென்றுள்ளது.  50 ஆண்டுகளில் இரண்டு முறையே தோல்வி கண்டுள்ளது. அதுவும் நேரு குடும்பத்தினர் இல்லாத நிலையில் மட்டுமே.

இப்படி இருக்கையில் 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி 2014ல் போட்டியிட்டுத் தோல்வி கண்டார். ஆனாலும் வென்று தொகுதி எம்பியான ராகுல் காந்தியை விட அதிகம் தொகுதியில் முகாமிட்டு ஐந்து ஆண்டுகளாக வேலைகள் செய்கிறார். தொகுதி எம்பி ராகுலிடம் சொல்வதைவிட ஸ்மிருதியிடம் சொன்னால் வேலை நடக்கும் என்று மக்கள் கருதும் அளவுக்கு பணி செய்துள்ளார். பல விவாதங்களில் ராகுலுக்கு அமேதி தெரியும், ஆனால் அமேதியில் என்ன நடக்கிறது நடக்கவில்லை என்ற விவரம் தெரியாது என்று நேரடியாக தாக்கியுள்ளார் ஸ்மிருதி இரானி.

Image result for smriti irani rahul gandhi amethi

2019 தேர்தலில் ஸ்மிருதி இரானி அமேதி வேட்பாளர் என்று பாஜக அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பின் போதிருந்து ராகுல் கேரளாவில் வயநாட்டில் போட்டியிடுவார் என்று செய்திகள் அடிபட்டன. காங்கிரஸ் இதை உறுதி செய்யவும் இல்லை மறுக்கவும் இல்லை. இதனால் அமேதி தொகுதி காங்கிரஸார் வேலை செய்வதா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர். ஆனால் வயநாட்டில் ராகுல் இங்கே போட்டி என்று காங்கிரஸார் இறங்கி வேலை செய்கின்றனர்.

இது பற்றி விவரம் கேட்டால் எந்தக் காங்கிரஸ் தலைவரும் சொல்வதில்லை எனவே வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் யாரிடமாவது பேச முடிவு செய்து டைம்ஸ் நவ் செய்தி ஊடகம் முயன்றது. கேமரா முன் பேச யாரும் முன்வரவில்லை. எனவே கேமராவை மறைத்து வைத்து பேசி விடியோ எடுத்தார் டைம்ஸ் நவ் நிருபர் தீபக் போபண்ணா. மஜீத் என்ற காங்கிரஸ் தலைவர் பேசினார்.

அவர் பேசியதில் “ராகுல் காந்தியை அமேதியில் தோற்கடிக்க பிஜேபி எல்லா வகையிலும் முயல்கிறது. அமேதியில் இருந்தே ஒரு ஆறு ஏழு காங்கிரஸ் தலைவர்கள் பிஜேபியில் சேருகிறார்கள் என்று இந்து பத்திரிகையில் படித்தேன். ஆகவே கண்டிப்பாக ராகுல் வேறு தொகுதியில் நிற்பார். கிறிஸ்தவ முஸ்லிம் ஓட்டுகள் கிட்டத்தட்ட 50% வரும். பிற ஓட்டுகள் ஒரு 50% வரும். ஆதிவாசிகள் எங்கள் பக்கம் உள்ளனர். அவர்கள் 8% ஓட்டைச் சேர்த்தால் நாங்கள் 58% வாங்குவோம். வயநாடு 1957ல் இருந்து காங்கிரஸ் கோட்டை. சமீபத்தில் சில உள்ளூர் பிரச்சனைகள் எங்களுக்கு சிக்கல் தந்தாலும் இது எங்கள் கோட்டை தான். ராகுல் இங்கே போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். நாங்கள் அடிப்படை வேலை பார்த்து தயாராகிவிட்டோம். SDPI உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு உள்ளது. ஆகவே வெற்றி உறுதி.” என்று கூறினார்.

இந்நிலையில் இந்து ஓட்டுக்களை ஒன்று திரட்டி களமிறங்க இந்து அமைப்புகள் பாஜக உள்ளிட்டவை ஆலோசித்து வருகின்றன. ராகுல் இங்கே போட்டியிட்டாலும் கோட்டையிலும் கடும் போட்டியைக் கொடுப்போம் என்று சொல்கிறார்கள் உள்ளூர் இந்து அமைப்பினர்.

ராகுல் கேரளத்திற்கு ஓடி வருவாரா? அல்லது அமேதியிலேயே அமைதியாக நிற்பாரா? என்பதே தற்போதைய 360000 ₹ கேள்வி.

செய்தி மூலம்: @TimesNow

(Visited 133 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close