நடுநிலையாளர்களின் அமைப்பு – 2014க்கு முன்னும் பின்னும்

சௌகிதார் நந்தினி (@_NAN_DINI) என்பவரது ட்விட்டர் பதிவு:

மானே தேனே பொன்மானே ஆங்காங்கே சேர்த்தது தமிழ்நேசன்

நடுநிலையாளர்களின் அமைப்பு – 2014க்கு முன்

வர்க்கம் – சிறப்புரிமை பெற்றது

மொழி – ஆங்கிலம் (தாய் மொழி எதுவானாலும்)

மதம் – சௌகரியமான நாத்திகம் (கிரகப் பிரவேசம், திருமணம், காதுகுத்து, இறுதிச்சடங்குகள் தவிர)

பண்டிகைகள் – ஈத், ஈஸ்டர், கிறிஸ்துமஸ், தீபாவளி, ஹோலி, பொங்கல், புத்தாண்டு (ஜனவரி 1)

உணவுப் பழக்கம் – ரகசியம்

தனிப்பட்ட எண்ணவோட்டம் – வீரமணி சொல்லிவிட்டார், அதனால் நான் பெரிய ஆள். திராவிட அமைப்புகளில் சொன்னார்கள், ஆகவே நான் அறிவாளி. கம்யூனிஸ்டுகள் சொன்னார்கள், எனவே நான் சிந்தனையாளர். ரோமிலா தபார், இர்ஃபான் ஹபிப், ராமச்சந்திர குஹா சான்றளித்தால் மட்டுமே அறிவாளி.

கலை – முகலாயர் கொடுத்தது, ஆங்கிலேயர் வளர்த்தது.

கட்டிடங்கள் – பாரசீகக் கட்டிடக்கலை முகலாயர்கள் தயவில் வந்தது

உணவு – முகலாயர்கள் பிரியாணி உள்ளிட்ட உணவுகளைக் கொண்டுவந்து கொடுத்தனர்.

பண்பாடு – முகலாயர்கள் குறிப்பாக ஔரங்கசீப் பண்பானவர்.

மொழி நயம் – ஆங்கிலேயர்களின் கொடை

போக்குவரத்து – ஆங்கிலேயர்கள் தொடங்கி வைத்தது

ஆங்கிலேயரின் சிறப்புக் கொடை – நேரு

இந்தியா பற்றிய எண்ணம் – இந்தியா பற்றிய அறிவு எங்கள் வீட்டு வேலைக்காரர்கள் நான்கு பேரிடம் உள்ளது போதும்.

வருத்தங்கள் – சென்னை ஆங்கிலேயர் காலத்துப் பொலிவை இழந்துவிட்டது. பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் நடைமுறைகளை இழந்துவிட்டது. கோவா போர்ச்சுகீசியர்களின் தன்மையை இழந்து நிற்பது. நமது மலைகள் ஸ்காட்லாந்து போல இல்லை.

கலப்புப் பண்பாடு – விஸ்கி, கபாப், நுஸ்ரத் ஃபதே அலிகான் பாட்டு, ஜாய் டு தெ வேர்ல்டு

சமூக அடையாளம் – மனைவியின் வகையில் ஏதோ ஒரு மூணாம் பங்காளி NGO நடத்துகிறார்.

கெட்ட வார்த்தை (அங்கீகரிக்கப்பட்டது) – ஆங்கில, ஃப்ரெஞ்சு, ஸ்பானிஷ் வசைச் சொற்கள். உயிரே போனாலும் இந்திய மொழிகளில் திட்டக்கூடாது

எண்ண்வோட்டம் – நாங்கள் பொறுப்பில் இருக்கும் வரை உலகம் அழகானது.

நடுநிலையாளர்களின் அமைப்பு – 2014க்கு பின்

வர்க்கம் – சிறப்புரிமை பெற்றது (குறிப்பிட்ட சில பள்ளிகள், கல்லூரிகள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பு, பிரிட்டிஷ் கவுன்ஸில் உறுப்பினர், குறிப்பிட்ட ஜிம், குறிப்பிட்ட சில கிளப்கள், பார்கள் பக்கம் போயிருந்தால் மட்டுமே. இல்லை என்றால் சிறப்பாவது உரிமையாவது ப்ளடி இண்டியன்)

மதம் – கடுமையான நாத்திகம் (திருமணம் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் சினிமா நட்சத்திரங்கள் கூடி ஆடிப்பாடி, ”தண்ணீர்” பெருக்கெடுத்து ஓடி, மாட்டுக்கறி விருந்துடன் நடக்க வேண்டும்), இறுதிச் சடங்கு – போன பிறகு என்ன சடங்கு. சுற்றுப்புறச்சூழல் பாதிக்காமல் புதைக்கலாம் அல்லது மின் மயானத்தில் எரிக்கலாம்.

பண்டிகைகள் – ஈத் (ஒவைசி போன்றோர் மிகச் சிறந்த நண்பர்கள்); ஈஸ்டர் – ஏசு பிழைத்து வந்தது சிறப்பான நிகழ்வு, சத்தியவான் எமனிடமிருந்து மீண்டது மூட நம்பிக்கை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், பாட்டுக்கள், உணவு, ஒயின் இதெல்லாம் சிறப்பு. தீபாவளி சுற்றுச்சூழல் மாசுபடுத்தும், ராமன் ஆணாதிக்கவாதி, அழகர் ஆற்றில் இறங்குவது தண்ணீருக்குப் பிடித்த கேடு, கோவில் திருவிழாக்கள் நேர விரயம்.

உணவுப்பழக்கம் – மாமிசம் உண்பது, குறிப்பாக மாட்டுக்கறி உண்ணும் படத்தை சமுக வலைத்தளங்களில் சுற்றில் விடவேண்டும்.

தனிப்பட்ட எண்ணவோட்டம் – ஔரங்கசீப் நல்லவர். திப்பு சுல்தான் சிறந்தவர். ஆங்கிலேயர் அடிமைப்படுத்தியதால் நாம் ஓரளவுக்கு உருப்பட்டோம்.

மதம் சார்ந்த எண்ணம் – ஹிந்து மதம் சார்ந்த எதையும் விமர்சிக்க வேண்டும். இஸ்லாம் என்றால் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும். (சாகவேண்டுமா?) கிறிஸ்தவம் என்றால் கொண்டாட வேண்டும். (காசு, ம்து, இன்னபிற)

இந்தியா பற்றிய எண்ணம் – நாங்கள் உருவாக்கிய இந்திய இது அல்ல. இரண்டு வேலைக்காரர்கள் மட்டுமே நல்லவர்களாக இருக்கிறார்கள். ஓலா/ஊபர் டிரைவர்கள் சிலர் நல்லவர்கள். லயோலா, எம்சிசி, ஜேஎன்யூ ஆட்கள் சூப்பர். நல்ல வேலைக்காரர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. மோடியால் அவர்கள் கிராமத்தில் கண்டதும் நடக்கிறது. வேலைக்கு வரமாட்டேங்கிறார்கள்.

தந்திரம் – நடுநிலை போலப் பேசி மோடிக்கு எதிராக கருத்துச் சொல்லவேண்டும். இதில் பயிற்சி மிக அவசியம்

கலப்புப் பண்பாடு – விஸ்கி, கபாப், யாசின் மாலிக் குறித்த கவலை, யாரையாவது கூட்டிக் கொண்டு வந்து தலித் என்று அடையாளம் சொல்லி பேச வைக்க வேண்டும்.

சமூக அடையாளம் – #^^$%^&%$^*மோடி ஆட்சியில் NGO பணம் காணாமலே போய்விட்டது. கணக்கு கேட்கிறார்கள் @#$%#^$%& மகன்கள்.

கெட்ட வார்த்தை (அங்கீகரிக்கப்பட்டது) – ஆங்கில, ஃப்ரெஞ்சு, ஸ்பானிஷ் வசைச் சொற்கள். சங்கி, மாட்டு மூத்திரம் குடி என்று இந்திய மொழிகளில் திட்டலாம்.

எண்ண்வோட்டம் – நாங்கள் நிர்வகித்த அந்த இந்தியாவை மீண்டும் கொண்டு வர எந்த எல்லைக்கும் போய் போராடுவோம். இந்த அரசாங்கத்தை கீழிறக்குவோம். சோனியாஜியை உலகத்தலைவர்கள் சந்தித்து பேசிய காலம் பொற்காலம். மன்மோகன்….. அவர் இருக்கட்டும். பரவாயில்லை. ராகுல் வந்தால்தான் நல்லது.

(Visited 33 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

Comment (2)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *