இலங்கை குண்டுவெடிப்புக்கு மறைமுக காரணமாக இருந்த இந்திய மதச்சார்பின்மை நடுநிலைவாதிகள்
இந்தியாவில் “நடுநிலைவாதிகள்” என்று கூறிக்கொள்ளும் நபர்களால் மேற்கொள்ளப்பட்ட “சகிப்புத்தன்மை” போன்றதொரு பிரச்சாரம் எவ்வாறு இலங்கையில் நூற்றுக்கும் மேலான உயிர்களை பலி வாங்கியது
நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் இனிமேலும் அதனை உணர்ந்து உண்மையை உணர்த்துவார்களா ? அல்லது மோதி மீதான அவதூறு தான் முக்கியம் என்று இது பற்றி கவலை கொள்ளமாட்டார்களா ?
தற்கொலைக் வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கையை இந்தியா இலங்கைக்கு பலமுறை கூறியபோதும், இலங்கை அதிகாரிகள் அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்தனர்.
இலங்கை அதை கேட்கவில்லை. அவர்கள் கேட்டிருந்தால் நூற்றுக்கும் மேலான உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.
இலங்கையில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினர் மீது குற்றம் சாட்டி, இலங்கைக்கும் பாக்கிஸ்தானிற்கும் உள்ள உறவை இந்தியா கெடுக்க முயற்சிப்பதாக இலங்கை எண்ணியது.
பாக்கிஸ்தான் இலங்கை உறவை இந்தியா கெடுக்க முயற்சித்ததா? அதுவும் பாக்கிஸ்தான் போன்ற ஒரு நாட்டுடன் இந்த உலகில் உள்ள எவரேனும் நெருங்கிய உறவை வைத்து கொள்ள விரும்புவார்கள் என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. பாக்கிஸ்தான் நாட்டில் இருந்து வெளி வரும் ஏதாவது ஒரு நல்ல செய்தி உண்டா ? மேலும், முஸ்லீம் பயங்கரவாதத்த்திற்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை விலையாக கொடுத்த ஒரு நாடு அதன் மூலம் வரும் ஆபத்தை அவ்வளவு எளிதாக எடுத்து கொள்ளாது.
இந்தியப் பாதுகாப்பு துறைகளின் திறமைகள் குறித்து பெரிய அவிப்பிராயம் இல்லாத நியூ யார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் கூட , இலங்கையில் நடைபெற்ற பயங்கவாத தாக்குதல்கள் குறித்து இந்தியா இலங்கைக்கு கொடுத்த துல்லிய எச்சரிக்கைகள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
பொறுங்கள், இங்கே மற்றொரு கோணம் உள்ளது. இந்தியா, ஏன் இலங்கை தீவில் இருக்கும் முஸ்லீம் சிறுபான்மையினரை சுட்டிக்காட்ட முயல்கிறது? பௌத்தர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் இலங்கை தீவில் இருக்கும் இணக்கத்தை இந்தியா தொந்தரவு செய்ய முயற்சிப்பதாக இலங்கை ஏன் நினைக்க வேண்டும்?
இரண்டு வெளிப்படையான சந்தேகங்கள் இங்கே தெளிவாக தெரிகிறது.
ஒன்று:
அரசியல் காரணம், இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கவரவாத அச்சுறுத்தலைக் குறித்து பேசாமல் அல்லது தடுக்காமல், ஆபத்துக்களைக் குறைத்து மதிப்பிட்டு, கண்களை மூடிக்கொண்டு, எல்லாம் சரியாக இருக்கிறது போன்று நடிக்கும் ஒரு போக்கு.
இரண்டாவது :
முஸ்லிம் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள்; “இந்தியா ஒரு சகிப்புத்தன்மையற்ற நாடு” என்று இந்தியாவின் உள்நாட்டு மற்றும் உலகளாவிய செய்தி ஊடகத்தில் தொடர்ந்து பரப்பப்படும் மோசமான அவதூறு பிரச்சாரம் ஆகும்.
உதாரணமாக, நியூயார்க் டைம்ஸ், இந்தியா குறித்து பெருவாரியான பயமுறுத்தும் செய்தி தலைப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருவது என்பது ஒரு எளிய Google தேடலில் தெரிகிறது.
அல்லது கார்டியனில் இந்த தலைப்பை பாருங்கள்.
உலகின் மிக செல்வாக்குமிக்க இத்தகைய “செய்தி” நிலையங்களில் இந்தியாவைப் பற்றிய வரும் இத்தகைய “நியாயமற்ற செய்திகள்” ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேற்கு நாடுகளில் உள்ள அவர்களது நண்பர்களுடன் உடன் சேர்ந்து கொண்டு மோடிக்கு எதிரான விரோதப் போக்கைத் தொடங்கிய இந்திய செய்தி நிறுவனங்களின் இந்த செயல்களால் எல்லா இடங்களிலும் பொது மக்களிடையே இந்தியாவைப் பற்றிய ஒரு தோற்றத்தை உண்டாக்குகிறது.
மேலும் முக்கியமாக, இத்தகைய செய்தி ஊடகங்கள், கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு வட்டாரங்களில் அதன் அதிகபட்ச தாக்கத்தை கொண்டிருக்கிறது.
சமீபத்தில், தென் அமெரிக்காவிலுள்ள பெரிய செய்தி சேனல்கள், இந்தியாவைப் பற்றி வெளிப்படையாக உண்மைக்கு புறம்பாக பல்வேறு பொய் செய்திகளை வெளியிடுவதை போடுவதைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன்.
சர்தார் பட்டேல், முஸ்லீம்கள் ஆட்சி செய்த மாநிலங்களை கைப்பற்றி இணைத்துக் கொள்ள விரும்பிய ஒரு “வலதுசாரி வெறியாளர்” என்று கூறியது பற்றி நான் எழுதியிருக்கிறேன். இந்தியா குறித்து அவதூறு பிரச்சாரம் எந்த அளவிற்கு செய்யப்படுகிறது என்று இந்த செய்தி சொல்கிறது.
இத்தகைய பிரச்சாரம் இந்திய உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கைகளை புறக்கணித்த அதிகாரிகளின் மனதில் “முஸ்லிம் சிறுபான்மையினருக்கு” எதிராக சுட்டிக்காட்ட முயற்சிக்கும் “சகிப்புத்தன்மையற்ற இந்தியா” என்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதா?
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பாக்கிஸ்தானை தண்டிப்பதற்கான இந்தியாவின் முயற்சியை மேற்கொண்டபோது, முஸ்லீம் விரோத செயல்திட்டத்தால் தான் இந்தியா அவ்வாறு சொல்கிறது என்று இந்திய மற்றும் உலகளாவிய ஊடகங்கள் தெரிவிக்க இத்தகைய பிரச்சாரம் உதவியதா?
புல்வாமா தாக்குதலுக்கு இந்தியாவின் இராணுவ பதில் குறித்து, “பா.ஜ.க வின் எண்ணம்” அல்லது “இந்திய முஸ்லிம்களைப் பற்றிய மனப்பான்மையுடன்” ஏதாவது ஒன்றைக் கொண்டுள்ளன என்று “FirstPost” கட்டுரையைப் பாருங்கள்.
இந்தியாவைப் பற்றி எழுதப்பட்ட அத்தகைய செய்திகள் ‘முக்கிய’ ஊடகங்களில் கூறப்பட்டது என்று சொன்னால் நீங்கள் நம்ப முடியுமா?
பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களில் இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கும் “முஸ்லிம்களின்” எதிரியாக இருப்பதற்கும் ஏதும் உள்ளனவா? என்ன பேசுகிறார்கள்? ஜெய்ஷ் பயங்கரவாத முகாமில் எமது விமானப்படை தாக்குகிறது, அதை பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவு செய்யலாமா?
பயங்கரவாத முகாங்களுக்கு எதிராக இந்தியாவின் இராணுவ நடவடிக்கையை இணைக்கும்போது, சில கற்பனையான “முஸ்லிம் விரோத செயல்திட்டத்துடன்” என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிடுகிறது. பார்க்க?
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து “பயங்கரவாத-பாக்கிஸ்தானிய-முஸ்லீம்” அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு மோதி அவர்கள் பிரச்சாரத்தில் கூறி வருவதாக ஒரு குற்றச்சாட்டினை வைக்கிறது.
குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாக இப்போது, ”நடுநிலை” ஊடகங்கள் இந்தியாவை பயங்கரவாதிகள் அல்ல, அப்பாவி முஸ்லீம்களுக்கு எதிராக போராடும் “வெறுக்கத்தக்க நாடு” என்று எல்லோருக்கும் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
இந்த போலி பிரச்சாரம் உண்மையான மற்றும் மிகவும் துயரமான விளைவுகளை கொண்டிருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை , ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போதும், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இறந்த போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது?
ஏப்ரல் 21 ம் தேதி நமது “நடுநிலைவாதிகள்” என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்? அவர்கள் வெளிப்படையான உண்மையை மறைத்து ஒரு “முட்டாள்தனமாக” செய்தியை கட்டமைப்பதில் மும்முரமாக இருந்தனர், இது ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் இல்லை என்று நிரூபிக்க முயன்றனர்!
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் “நடுநிலைவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட வலைத்தளத்தை உருவாக்கிய ஒரு குற்றஞ்சாட்டப்பட்ட உண்மை விளம்பி, இந்தியா உளவுத்துறை தகவல்களை இலங்கைக்கு வழங்கவில்லை என்றும் அது ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் நிரூபிக்க முயன்று தனது முழு நாளையும் அதில் கழித்தார்! நினைவில் கொள்க?
இலங்கையில் பயங்கரவாத வெடி குண்டுத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய அவதூறு பிரச்சாரம், இந்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கையை இலங்கை அதிகாரிகள் சந்தேகத்திற்கு உட்படுத்தியதிற்கு காரணமாக இருக்கக்கூடும்
தாராளவாதிகள் இடைநிறுத்தப்பட்டு பிரதிபலிக்க முடியுமா? அல்லது மோடி அரசு அத்தகைய முன்னுரிமையை மறுக்கிறதா?
நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் இனிமேலும் அதனை உணர்ந்து உண்மையை உணர்த்துவார்களா ? அல்லது மோதி மீதான அவதூறு தான் முக்கியம் என்று இது பற்றி கவலை கொள்ளமாட்டார்களா ?
– அபிஷேக் பானர்ஜி
ஐ.ஐ.எஸ்.சி பெங்களூரில் உதவி பேராசிரியராகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் ஒரு கணித காதலர் அபிஷேக் பானர்ஜி. அவர் “ஆபரேஷன் ஜோஹர் – ஏ லவ் ஸ்டோரி” , ஜார்கண்டில் இடது சாரி பயங்கரவாதம் குறித்த ஒரு நாவலை எழுதியவர்.
மொழிபெயர்ப்பு – சீனிவாசன்