உலகம்சிறப்புக் கட்டுரைகள்தமிழ்நாடு
ரஃபேல் -ஹிந்து ராம் மீண்டும் அம்பலப்பட்டார்.

ஏற்கனவே ஹிந்து பத்திரிகை குழுமத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் என்.ராம் ,ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்களைப் பற்றி பொய்யும் புரட்டுமான கட்டுரையை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் பெயரில் வெளியான அந்த கட்டுரை கூட மற்றோர் இணைய தளத்தில் இருந்து திருடப்பட்டது என்ற உண்மை உடனடியாக வெளியே வந்தது.
இது தொடர்பான சுட்டி இதோ –> https://oreindianews.com/?p=1079
இந்நிலையில் , இன்றைய ஹிந்து ஆங்கில செய்தித்தாளின் முதல் பக்கத்தில் மற்றும் ஒரு ரஃபேல் கட்டுரை என்.ராமின் பெயரில் வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த கட்டுரை பாதுகாப்பு துறையின் அப்போதைய இணை செயலாளர் எஸ்.கே.ஷர்மா 2015 ம் ஆண்டு நவம்பர் ,மாதம் 24ம் தேதி எழுதிய குறிப்பின் நகலைக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. அந்த ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான குறிப்பில், எஸ்.கே.ஷர்மா ,பிரதமர் மந்திரியின் அலுவலகம் ரஃபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் , ஒப்பந்தம் தொடர்பான முறைகளில் ,பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு இணையாக பேச்சுவார்த்தைகளை நடப்பதாகவும் , அது பாதுகாப்பு துறையின் பேச்சுவார்த்தை முறைகளை பலவீனப்படுத்துவந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரதம அலுவலக அதிகாரிகளை ரஃபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகியிருக்க வலியுறுத்துவதாகவும் ,அதே சமயம் பிரதமர் அலுவலகம் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் பேச்சுவாத்தைகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பின், பிரதமர் அலுவலகமே நேரடியாக இந்த ஒப்பந்த நடைமுறைகளை முன்னின்று பிரான்ஸ் அரசுடன் நடத்தலாம் என்றும் அந்த குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.
ஆனால் குறிப்பின் முழு நகலையும் வெளியிடாமல் ,பாதி கத்தரித்த பகுதியை மட்டுமே விஷமத்தனமாக வெளியிட்ட என்.ராம் , பிரதமர் அலுவலகம் மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் பேச்சுவாத்தையில் தலையிட்டதாக செய்தி வெளியிட்டது.
ஆனால் என்.ராமின் கள்ளத்தனம் உடனடியாக சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தப்பட்டது. குறிப்பின் முழு பகுதியும் இப்போது படிக்கக் கிடைக்கிறது .
பிரஞ்சு பேச்சுவார்த்தை குழுவின் தலைவரான ஜெனரல் ஸ்டீபன் ரெப் பற்றியும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது . அவர் ” ஒப்பந்த வழிமுறைகளில் வங்கி உத்தரவாதம் இல்லை எனவும் , விநியோக நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளும் மற்றும்
உறுதி கடிதமுமே போதுமான ஒப்பந்த உறுதியை உத்தரவாதம் அளிக்கிறது. ” என்று பதிவு செய்துள்ளார் எஸ்.கே.சர்மா .
குறிப்பின் அடிப்பகுதியில் ,அப்போதைய பாதுகாப்பு அமைச்சரும், தற்போதைய கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் ,தனது கையால் எழுதிய குறிப்பையும் படிக்க காணலாம். அதில் அப்போது நடந்த இரு நாட்டு உச்சி மாநாட்டின் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்திய பிரதமர் அலுவலகமும் ,பிரான்ஸ் அதிபர் அலுவலகமும்ரஃபேல் ஒப்பந்தங்களை கண்காணித்து வருவதாகவும் , பாரா ஐந்தில் எஸ்.கே .ஷர்மா குறிப்பிடுவது அதிகப்பிரசங்கித்தனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்..
ஆகா , ஒரு முழுமையான குறிப்பை வெளியிடாமல் , வேண்டுமென்றே பாதி குறிப்பு நகலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டே இருக்கிறார் திருவாளர் ராம்..
ஏற்கனவே ரஃபேல் ஒப்பந்தம் என்பது ரெண்டு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் ஆகையால் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பிரான்ஸ் அரசும் இது தொடர்பாக பலமுறை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் ,மீண்டும் மீண்டும் காங்கிரஸ் அரசும் ,பத்திரிக்கைகளும் இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி பேசி வருவதாக நடுநிலையாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமரிசித்து வருகின்றனர்
(Visited 494 times, 1 visits today)
+7