செய்திகள்

996 என்றால் என்ன தெரியுமா?

சீன மக்களைக் கொல்லும் ஒரு வகை வேலை முறை தான் இந்த 996.

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரத்துக்கு 6 நாட்கள் வேலை. இதுதான் 996. இந்த 72 மணி நேரங்களில் கொடுத்த வேலையில் ஏதேனும் பாக்கி இருந்தாலோ அல்லது குறைபாடு இருந்தாலோ உட்கார்ந்து முடித்துவிட்டுச் செல்லவேண்டும். ஞாயிறு விடுமுறை கிடையாது.
பல பணியாளர்கள் நள்ளிரவு 12 மணிவரை கூட தினமும் வேலை செய்கிறார்கள். காரணம் செய்யாவிட்டால் வேலை போய்விடும். வேறு ஆளைப் போட்டு வேலை வாங்குவார்கள்.

தொழில்நுட்ப நிறுவனங்களில் ப்ரோக்ராமர், அனலிஸ்ட், ப்ராஜெக்ட் லீட், டெஸ்டிங்க், டிசைனிங் போன்ற பணிகளில் இப்படி நிலை. மேனேஜர்கள், அதற்கு மேலான பதவி என்றால் கட்சி ஆளாக இருக்க வேண்டும். அடித்து வேலை வாங்கத் தெரிய வேண்டும். அவ்வளவே.

image.png


சில ப்ரோக்ராமர்கள் அலுவலத்திலேயே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்து இறந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஒருவர் ஆபீசை விட்டு வந்து ரோட்டில் விழுந்து செத்த போது சாவுக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை என்றது அந்தக் கம்பெனி. வேலை தவிர பிற விஷயங்கள் பற்றிப்பேசவே தெரியவில்லை என்று பலர் வைத்தியம் பார்க்கிறார்களாம். லீவு கெட்ட வார்த்தை என்பதால் டாக்டர்களும் அதைச் சொல்வதில்லை.


996icu என்று தளம் வைத்து ஒருவர் ஹாங்காங்கில் இருந்து ரகசியமாக இந்த விவரங்களை வெளியிட்டு வருகிறார். சீன அரசு பலமுறைகள் முயன்றும் தளத்தை முடக்க முடியவில்லை. நம்மூர் தமிழ்ராக்கர்ஸ் போல முடக்கிய ஒருமணி நேரத்தில் மீண்டும் வருகிறது தளம்.
சீன அரசு இப்படி 996 வேலை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டது. ஏனென்றால் குற்றச்சாட்டுக்கு ஆளான கம்பெனிகளோடு ஒப்பந்தம் கேன்சல் என்று அமெரிக்க ஐரோப்பிய கம்பெனிகள் சொல்லிவிட்டன. இப்போது “non fixed, flexible work hours” என்று போட்டு அதே 996ஐத் தொடர்கிறார்கள். இந்த அதிகப்படி வேலைக்குத் தனிப்படியோ கூடுதல் சம்பளமோ கிடையாது.
கொடுத்த சம்பளத்துக்கு 996 வேலை. சில சமயங்களில் வேலை அதிகம் என்று 16-18 மணி நேரம் வேலை செய்ய உத்தரவு வரும். சீன முன்னேற்றம் என்று கோஷம் போட்டுச் செய்யவேண்டும். மேனேஜர்கள் இரவு 10-12 மணிவரை ஆபீசில் ஆள் வைத்து நோட்டம் பார்த்து அந்த நேரம் ஆபீசில் இருப்பவர்களுக்கு வாராந்திர ஊக்கத்தொகை கொடுப்பார்களாம். 9 மணிக்கு வீட்டுக்குப் போனால் ஊக்கத்தொகை அஞ்சு பைசா கிடையாது.

image.png


வெள்ளைக்காலர் வேலை இப்படி என்றால் நீலக் காலர் வேலை எப்படி?


தொழிற்சாலைகளில் நிலை வேறு மாதிரி. வீடு கிடையாது. ஒரு கட்டிடத்தில் சுவர் முழுக்க ஸ்லாப் போட்டு வைத்திருப்பார்கள். அங்கே படுத்துத் தூங்க வேண்டும். தரையில் கம்பளி விரித்திருப்பார்கள், அதிலும் தூங்கலாம். காலை 5.30 மணிக்கு பெல் அடிப்பார்கள் எழுந்து காலைக் கடன்களை முடித்து 6 மணிக்கு டீ குடிக்க வரிசையில் நிற்க வேண்டும்.


தலைவர் பிறந்த நாள் போன்ற நல்ல நாட்களில் பிஸ்கட் தருவார்கள். மற்ற நாட்களில் வெறும் டீ. குடித்துவிட்டு 7 மணிக்குக் கிளம்பும் பஸ்ஸில் ஏறிக் கொண்டால் 7.30க்கு தொழிற்சாலை. 8 மணிக்கு வேலை. 9.30க்கு ஒரு சிக்கன்/பன்றி சூப். 11.30க்கு டீ. 1 மணிக்கு மதிய உணவு. 1.30க்கு மீண்டும் வேலை. இரவு 8 மணிக்கு பெல் அடிப்பார்கள். பஸ் ஏறி 8.30க்கு குடியிருப்பில் விடுவார்கள்.
அங்கே 9 மணிக்குத் தொடங்கி இரவு உணவு. 9.30க்கு அதிகாரி வந்து நாட்டுத் தலைவரின் பெருமைகள், சீனா உலகை எப்படிக் காலடியில் வைத்திருக்கிறது என்றெல்லாம் பேசி, விடியோ காட்டுவார். 11 மணிக்கு பெல் அடிப்பார்கள். படுத்துத் தூங்கிவிட வேண்டும்.


சம்பளம் கையில் தரமாட்டார்கள். ஊரில் உள்ள கட்சி ஆபீசருக்கு அனுப்புவார்கள். அங்கே அவர்கள் குடும்பத்துக்கு பணம் கொடுப்பார்கள். வேலை செய்பவனுக்கு உணவு, உடை, உறைவிடம். சீன முன்னேற்றத்துக்கு ஜே.

=========================================

இப்படிப்பட்ட மக்களுக்கு குழந்தைகள் பிறப்பதில்லை. பலரும் உறவு, நட்பு என்பதே இல்லாமல் இருக்கிறார்கள். உடல்தேவை என்பதே எழாது போவது பெரும் பிரச்சனையாக உள்ளது. வெள்ளைக்காலர் ஆட்கள் டாக்டரிடம் போகிறார்கள். நீலக்காலர் ஆட்களுக்கு அதுவும் இல்லை. மக்கள் தொகை அதீத வேகத்தில் குறைகிறது. வயதானவர்கள், வலிமையற்றவர்கள் அதிகரிக்கிறார்கள்.

image.png


இந்த லட்சணத்தில் இருக்கும் சீனம் உலகை வெல்லப் போவதாக உருட்டுகிறது.


https://www.scmp.com/tech/tech-trends/article/3136510/what-996-gruelling-work-culture-polarising-chinas-silicon-valley

(Visited 253 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close