ஒரே வாட்ஸ் அப்நம்பர் – இரண்டு மொபைல்களில்
வாட்ஸ் அப் பீட்டாவில் அவ்வப்பொழுது பல்வேறு முயற்சிகள் செய்யப்படும். அவை அனைத்தும் பயனர்களுக்கு வெளியிடப்படாது. பல ஆப்ஷன்கள் சோதனை செய்யப்பட்டு எந்தப் பிரச்சனையும் இல்லாத ஆப்ஷன்கள் மட்டுமே அனைவருக்கும் அப்டேட் மூலம் அளிக்கப்படும்.
சமீபத்தில் டார்க் மோட் இப்படி டெஸ்ட் செய்யப்பட்டு ( கிட்டத்தட்ட ஒரு வருடம் பீட்டாவில் டெஸ்ட் செய்யப்பட்டது) வெளியிடப்பட்டது. அடுத்து தானாகவே அழியும் மெசேஜ் சோதனையில் உள்ளது. அதை தொடர்ந்து இப்பொழுது புதிய ஆப்ஷன் ஒன்று வெளியில் வந்துள்ளது. அதாவது ஒரே மொபைல் எண்ணை இரண்டு வெவ்வேறு மொபைல்களில் வாட்ஸ் அப்பில் உபயோகிக்கும் வசதி.
இதுவரை இந்த வசதி கிடையாது. ஆனால் அதிக அளவிலான பயனாளர்கள் இந்த வசதி வேண்டும் எனக் கேட்டதால் இது இப்பொழுது பீட்டா டெஸ்டிங்கிற்கு வந்துள்ளது. இரண்டாவது மொபைலில் உங்கள் எண் வாட்ஸ் அப்பில் இணைந்தால் உங்கள் முதல் மொபைலில் இருக்கும் வாட்ஸ் அப் செயலிக்கு உடனடியாக நோட்டிபிகேஷன் வரும். ஏனென்றால் என்க்ரிப்ஷன் மாறுபடும்.
ஆனால் இது அனைவருக்கும் வருமா? அப்படி வருவதாக இருந்தால் எவ்வளவு நாள் இது போன்ற விஷயங்கள் சொல்லப்படவில்லை.