Operation Parindey
2016ல் பஞ்சாப் மாநிலம் நாபா சிறைச்சாலையில் இருந்து 2 தீவிரவாதிகள் உட்பட ஆறு பேர் பட்டப்பகலில் தப்பித்து சென்றனர். அவர்கள் தப்பித்து சென்று 24 மணிநேரத்தில் முக்கிய தீவிரவாதியான ஹர்மிந்தர் மின்டூ தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டான். இதை அடிப்படியாக வைத்து ZEE 5 எடுத்துள்ள படம்தான் Operation Parindey.
மொத்தம் ஒரு மணி நேரம் மட்டுமே படம். அதனால் தேவையில்லாத பாடல்கள், நகைச்சுவை திணிப்புகள் எதுவும் இல்லை. சிறைச்சாலையில் இருந்து தீவிரவாதிகளை தப்பிக்கவைப்பதில் இருந்து படம் துவங்குகிறது. படத்தில் மிகப்பெரிய குறையும் இதுதான். ஜெயிலின் மெயின் கேட்டை தாண்டி சென்றவுடன் கைதிகள் அடைபட்டிருக்கும் இடம் வருவது போல் காட்டி இருப்பர். அதிகபட்ச பாதுகாப்பு உடைய சிறை நாபா . ஆனால் மிக எளிதாக கடத்துவது போல் காட்டியது ஏமாற்றமே.
அங்கிருந்து 3 கார்களில் செல்லும் குற்றவாளிகள் 3 பக்கமாக பிரிந்து செல்கின்றனர். இப்பொழுதுதான் கதாநாயகன் உள்ளே வருகிறார். தொடர்ந்து எப்படி அவர்கள் எங்கே சென்றிருப்பார்கள் என துப்பறிந்து எப்படி தீவிரவாதியையும் அவனுக்கு உதவிய முன்னாள் குற்றவாளியையும் கைது செய்கின்றனர் என்பதே மிச்ச கதை. ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் அதிகாரியாய் வரும் அமித் சாத்தையும் தீவிரவாதியாய் வரும் ராகுல் தேவையும் தவிர்த்து எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்க மறுக்கிறது.

ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்கிற அவசரத்தில் படமாக்கியதில் எந்த ஒரு காட்சியும் மனதில் நிற்கவில்லை. இன்னும் ஒரு அரை மணி நீட்டித்து துப்பறியும் காட்சிகள் மனதில் நிற்பது போல் எடுத்திருக்கலாம் என்பது எண்ணம். போனால் போகட்டும் என பெண் போலீசாக ருச்சா இனாம்தார். தீவிரவாதி தப்பிக்க திட்டம் தீட்டிய முன்னாள் குற்றவாளியை அவர் கைது பண்ணும் இடம் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை பார்க்கலாம்.