
ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை இட்டிருந்தது. அவர்கள் நிறுவன தயாரிப்பான தேயிலையை விளம்பரப்படுத்த எடுக்கப்பட்ட விளம்பமர படத்தின் முக்கிய இடமாக கும்பமேளாவை மையப்படுத்தி அந்த குறும்படம் எடுக்கப்பட்டிருந்தது..
அதாவது கும்பமேளாவில் எப்போதும் பெரும்பாலானவர்கள் தொலைந்து போவார்கள் என்கிற கருத்தாக்கத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த படம், சமூக வலைத்தளங்களில் மிகவும் அதிருப்தியை இந்து ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ட்விட்டரில் BoycottHindustanUnilever– என்கிற ஹாஷ்டாக் இப்போது வைரலாகி வருகிறது.
ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் இப்போது அந்த விளம்பர படத்தை தனது
பக்கத்தில் இருந்து நீக்கி விட்டது ..ஆனாலும் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம்தயாரிப்பில் வெளிவரும் பொருட்களை வாங்க மாட்டோம் என்கிற கோஷங்கள் சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறதை அடுத்த அந்த நிறுவனத்தின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக சந்தை பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
புகை இல்லாத தீபாவளி, தண்ணீர் இல்லாத ஹோலி என ஹிந்துக்களின் பண்டிகை கொண்டாட்டங்களின் போது மட்டும் இவ்வாறு தொடர்ச்சியாக அவதூறு செய்திகள்,விளம்பர படங்கள் வெளிவருவதை பொது மக்கள் கூர்ந்து கவனித்தே வருகின்றனர்.
(Visited 53 times, 1 visits today)
+2