நான் கிறிஸ்துவனில்லை. நானும் இந்துதான். இந்த டேனியல் என்கிற அடைமொழி எனக்கு விகடன் கம்பெனிக்காக “அலைகள்” சீரியல் பண்ணும் போது வைத்தார்கள். ( விகடந்தானே! விளங்கிடும்). இந்த பெயரில் நான் “சித்தி” எனும் தொடரில் நடித்ததால் வந்த பாத்திரப் பெயர். மேலும் “காட்மென்” வெப் சீரியலில் இந்த பெயரில் பேசியதால்தான் பிரச்சனை பெரிதுப் படுத்தப் படுகிறது. என் மனைவி, பெற்றொர் எல்லோரும் விமர்சிக்கப் படுகின்றனர். #டேனியல்_பாலாஜி விளக்கம்.
நம் கேள்விகள்:- முதலில் இந்தத் தொடரின் மீதுதான் எங்கள் கண்டனங்கள். அடுத்து இப்படி ஒரு தொடரை எடுத்தவரின், நடித்தவரின் உள்நோக்கம் நிச்சயம் விமர்சிக்கப் படும். நீ கிறிஸ்துவனில்லை என்று சொன்னால் இன்னும் அதிகக் கோபம் வருகிறது.
“அவனாவது ஒரு மதவிரோதி!. இந்துக்களை இழிவுப்படுத்தும் வகையில் செயல்படுகிறான். ஆனால் நீ…. காசுக்காக எதையும் செய்வாயா? கொஞ்சம் கூடுதலாக காசும் பிரபலமும் கிடைக்க இன்னும் என்னவெல்லாம் செய்வாய்?” என்று கேட்கிறோம்.
உன் தந்தை வைத்த பெயரை எவனோ ஒருத்தன் மாற்றுகிறான், அதற்கு நீ ஏன் ஒத்துக் கொள்கிறாய்?
காசு…துட்டு..பணம்…மணி..மணி. அதானே?? நீ ஒருத்தன் மரியாதை கொடுக்கும் உன் குடும்பத்தை பேசினால் வலிக்குதில்ல! அப்ப இந்துக்களின் உலகமே வணங்கும் கடவுளை அவர்களின் நம்பிக்கையை கேலி செய்தால் எதிர்வினை இல்லாமல் போகுமா??
இன்னும் வழக்கு தீரவில்லை. வழக்குகள் தொடரும். நீயும் சரி.. அதில் சாமியாராக நடித்த ஜெயப் பிரகாஷ், சோனியா அகர்வால் ஆகியோர் இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதற்காக பகிங்கிர மன்னிப்பு கோர வேண்டும். (வருத்தம் தெரிவிக்கக் கூடாது) அது கோர்ட்டிலா அல்லது பொதுவிலா என்று நீங்கள் தீர்மானியுங்கள்.
இது ஒன்றுதான் உங்கள் தொழிலிலும் சரி.. வாழ்விலும் மீண்டு வர ஒரே வழி. #TheHindu போன்ற தேசவிரோத பத்திரிக்கைகளில் புலம்புவது உங்களை கரை சேர்க்காது. அவர்கள் உங்களை மேலும் ஆழப் புதைப்பார்கள். ரவி சுந்தரம் 4/06/2020