எதற்கெடுத்தாலும் போராட்டம், விளைவு …. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 50% தொழில் முதலீடு குறைவு
சென்னை: மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில அரசு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட அளவிலான தொழில் முதலீடுகள் நடைபெறும் என்று முன்மொழியும். தற்போது மாநிலங்களில் தொழில் முதலீடுகள் எவ்வளவு நடந்துள்ளது என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வகையில் தமிழகம் முன்வைத்ததே 19,410 கோடி ரூபாய் தான். ஆனால் இதில் 8,340 கோடிதான் தமிழகத்தில் தொழில் முதலீடு நடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் அரசு முன்மொழிந்த தொகை 1,69,000 கோடி ரூபாய். தொழில் முதலீடு அரசு முன்மொழிந்ததைக் காட்டிலும் அதிகமாக நடந்துள்ளது. 1,90,000 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. குஜராத், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் அதிக முதலீட்டை முன்மொழிந்தன. ஆனால் முதலீடு குறைவாகவே வந்துள்ளது. குஜராத்தில் 41,140 கோடி ரூபாயும், ஆந்திராவில் 25,290 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் 2 லட்சம் கோடியையும், ஆந்திரா 85,000 கோடியையும் முன்மொழிந்தது.
மற்ற மாநிலங்களில் தமிழகத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது தொழில் துறை மாநிலம் என்று பெயரெடுத்த தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. போராட்டக் களமாகவும், எந்த தொழிற்சாலைகள் அமைந்தாலும் சுற்றுப்புறச் சூழல் என்ற பெயரில் உள்ளூர் மக்களை இணைத்துக் கொண்டு பெரும்பாலான திட்டங்களை எதிர்த்துப் போராடுவதாலும், தொழில் முதலீடுகள் பெருமளவு குறைந்து வருகிறது. தமிழக அரசு தமிழ்நாட்டை தொழில் நடத்துவதற்கு ஏற்ற மாநிலம் என்ற நம்பிக்கையைக் கொடுக்காவிட்டால் , இன்னும் முதலீடுகள் குறையும் அபாயம் உள்ளது.