10% பொதுப்பிரிவிலுள்ள ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு

சென்னை: 10% பொதுப்பிரிவிலுள்ள ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  போட்டுள்ளது. மத்திய அரசு கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் 10% இட ஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளும் பலன்பெறும் வகையில் சட்டத்தைக் கொண்டு வந்தது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மற்றும் பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இச்சட்டம் வெற்றி பெற்றது.

திமுக, அதிமுக இரு கட்சிகளும் இதை எதிர்த்தன. ஆனால் எதிர்த்து வாக்களிக்கவில்லை.  திமுக இதை உயர்சாதியினருக்கான நலன் என்று பார்ப்பதால் எதிர்த்து வழக்கைப் பதிவு செய்துள்ளது. பொதுப்பிரிவில் உள்ள சமூகத்தின் வாக்கு பெருமளவு தாக்கத்தை தமிழக அரசியலில் தங்கள் வெற்றியைப் பாதிக்காது என்பதால் இரு பெரும் கட்சிகளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் முன்னேற கொண்டு வந்துள்ள சட்டத்தை ஆதரிக்கவில்லை என்பதே உண்மை. பல பத்திரிகைகளும் உயர் சாதிகளுக்கான இட ஒதுக்கீடு என்ற பொய்யான செய்திகளை எழுதுவது கண்டனத்திற்குரியது.

ஒரு இடத்தில் கூட பொதுப் பிரிவிலுள்ள இந்து உயர் சாதியினருக்கு என்று குறிப்பிடப்படவில்லை. பல கிருத்துவர்கள், இஸ்லாமிய சமூகங்கள் கூட பொதுப் பிரிவில் உள்ளன என்பதே உண்மை.

(Visited 9 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *