புது டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் பொறுப்பில் இருந்து ராகேஷ்ஸ் அஸ்தனா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனராக பொறுப்பு வகித்து வந்த அலோக் வர்மா கடந்த வாரம் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அஸ்தனாவின் பதவி பறிப்பும் நடந்துள்ளது. கூடுதலாக சில சிபிஐ அதிகாரிகளையும் இடமாற்றம் செய்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
சிபிஐக்குள் நடந்த அதிகார மோதலை தொடர்ந்து இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இடைக்கால சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
ராகேஷ் அஸ்தனா விவகாரத்தில் சிபிஐ எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. இந்த நிலையில் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று புதிய இயக்குனரை நியமிக்க ஏதுவாக அலோக் வர்மாவின் டீமில் இருந்தவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 24-ம்தேதி சிபிஐ இயக்குனருக்கான தேர்வுக்கு கூடுகிறது. இதில் சிபிஐயின் புதிய இயக்குனர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
(Visited 26 times, 1 visits today)