தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். அப்போது ரஜினிகாந்த் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க சென்றனர். அப்போது ரஜினிகாந்தை நோக்கி, யார் நீங்க ? என்று அகங்காரமாகக் கேட்ட இளைஞர் சந்தோஷ்ராஜ்.
தற்போது ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என துண்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் சந்தோஷ் ராஜ். எந்த அறிவிப்பும் கல்லூரி நிர்வாகத்திற்குக் கொடுக்காமல் துண்டுப் பிரச்சாரம் விநியோகத்ததின் அடிப்படையில் காவலர்கள் இன்று கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். எந்த ஆதாரமும் இல்லாமல் மக்கள் அதிகாரம் மற்றும் பல கம்யுனிஷ அமைப்பினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் துண்டுப் பிரச்சாரங்களை ரயிலில், பேருந்தில் என அனைத்து இடங்களிலும் கொடுப்பதகாவும், பொதுமக்களில் சிலர் கேள்வி கேட்டால் விளக்கம் தர இயலாமல் ஒதுங்கிச் செல்வதாகவும் உள்ள வீடியோக்களை யூ டியூப்பில் பலரும் சில தினங்களுக்கும் முன்பாக பகிர்ந்திருந்தார்கள்.
அப்பாவிகளை வேலைக்கு அமர்த்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் துண்டுப்பிரச்சாராங்களை விநியோகித்து வருகின்றனர் மக்கள் அதிகாரம் மற்றும் சுற்றுச் சூழல் என்ற பெயரில் இயங்கும் அமைப்புகள்.