புது டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் முடிவுக்காகக் காத்திருக்கிறது சிபிஐ. ஏற்கனவே இது குறித்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது முதல் தகவல் (குற்ற) அறிக்கையை மே, 15, 2017 அன்று பதிவு செய்தது. அந்நிய முதலீட்டு ப்ரோமோசன் அமைப்பில் முறைகேடான வழியில் 305 கோடியை ஐஎன்எக்ஸ் மீடியா பெரும் வகையில் 2007 ஆம் ஆண்டில் சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது செயல்பட்டார் என்பதே அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு.
ஏற்கனவே இது குறித்த வழக்கில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பணத்தைப் பெற்றுக்கொண்டார் என்ற அடிப்படையில் தான் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 33 times, 1 visits today)