சென்னை: ஜாக்டோ ஜியோ ஆசிரியர் அமைப்பு மற்றும் பல அரசு யூனியன்கள், இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடுகின்றனர். புதிய முறையில் ஆசிரியர்கள் பென்சன் பங்கில் தங்களது பங்கையும் செலுத்த மறுப்பு தெரிவித்தும், பழைய முறைப்படியே அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும், மேலும் புதிய ஆசிரியர்களை மழலைக் குழந்தைகளுக்கான பள்ளிகளில் அமர்த்தவே அரசு முயற்சிக்கிறது, நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைத்தால் மாணவர்களின் கல்விப் பயிற்சித் திறன் பாதிக்கப்படும் என்பதை எதிர்த்து போராவிருக்கின்றனர். இவ்வாறு ஜாக்டோ ஜியோ அமைப்பின் தியாகராஜன் அவர்கள் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் போராட்டாட்த்தில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் சில தினங்களுக்கு முன்பாக கடும் எச்சரிக்கைகளைக் கொடுத்தார். 10,00,000 க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் , 175 யூனியன்கள் இன்றைய போராட்டத்தில் குதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.