புதுடில்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட இயலாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. மேலும் தமிழக அரசு மின்சார வசதி, தண்ணீர் வசதி அனைத்தையும் செய்து தர வேண்டும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி , “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது, எனவே போராட்டத்தில் யாரும் ஈடுபடவேண்டாம் ” என்று பேட்டியளித்தார்.
இதனையடுத்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு பின்பற்றவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
(Visited 17 times, 1 visits today)