சுந்தர காண்டம், ஆஹா, அழகன், கோகுலம், அமரன், தளபதி போன்ற பிரபல படங்களில் நடித்தவர் பானுப்பிரியா. கடைசியாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜ் மனைவியாக நடித்திருந்தார்.
தற்போது பானுப்ரியா வீட்டில் பணிபுரியும் சந்தியா என்ற சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக, ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் பிரபாவதி புகார் அளித்துள்ளார். சிறுமிக்கு வயது தற்போது 16. பானுப்பிரியாவும் தனது மகளை சொந்த ஊருக்குக் கூட அனுப்பி வைக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார் என்று சிறுமியின் தாயார் பதமாவது புகாரில் தெரிவித்துள்ளார்.
மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு சிறுமியை பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பினோம் . ஆனால், ஒன்றரை வருடங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை, மேலும் பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
“பாலியல் தொல்லைப் பற்றி அறிந்ததும் நேரில் சென்று கேட்டேன். அப்போது ‘எங்களிடம் பணம் உள்ளது. உன் மகளைத் திருட்டுப் பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம்’ என மிரட்டினார்கள்” என சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி போலீஸ் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.