முன்னா பிரசாத் பீகார் மாநிலத்திலுள்ள ச் பக்ஸரை சேர்ந்தவர் . இவர் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கிட்னி பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள முன்னா அவ்வப்போது விடுப்பு எடுத்து வந்துள்ளார்.
அப்படி மனைவியை கவனித்துக் கொள்ள விடுப்பு வேண்டும் என முன்னா உயரதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால்.அவர்கள் விடுப்பு எல்லாம் தர முடியாது என கண்டிப்பாகக் கூறியுள்ளனர்.
இதனால் வெறுத்துப்போன முன்னா, தனது மனைவியைக் கொல்லப் போகிறேன் , அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய 2 நாட்கள் விடுப்பு வேண்டும் என கடிதம் எழுதி அதனை தனது உயரதிகாரிகளுக்கும், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டார்.
இதனைப்பார்த்து அதிர்ந்துபோன அதிகாரிகள் ‘நீங்கள் எத்தனை நாள் வேண்டுமானாலும் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டனராம்.
இந்நிலையில் தனது செயலுக்கு விளக்கமளித்த முன்னா, எனது மனைவியை கவனித்துக் கொள்ள ஆள் இல்லை. அவளை பார்க்க விடுப்பு கேட்டால் கொடுக்க மாட்டிங்கிறார்கள். அந்த விரக்தியில் தான் இப்படி கடிதத்தை எழுதினேன் என கூறினார். மன்னிப்பும் கோரினார்.
(Visited 43 times, 1 visits today)