கொல்லம்: சீதை என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் ஆதித்யன் ஜெயன் , தன்னுடன் நடிக்கும் அம்பிலி தேவியை நேற்று திருமணம் செய்துகொண்டார். கொல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் இறந்த திருமணம் நடைபெற்றது.
ஆதித்யனுக்கு இது நான்காவது திருமணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் அம்பிலிக்கும் இது இரண்டாவது திருமணம். அம்பிலி ஏற்கனவே லோவல் என்ற ஒளிப்பதிவாளரை மணந்திருந்தார். தற்போது டைவர்ஸ் வாங்கி விட்டார். அவருக்கும் ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார்.
2015 ல், அம்மா என்ற சீரியலில் நன்றாக நடித்ததற்காக சிறந்த நடிகை விருதைப் பெற்றுள்ளார், அம்பிலி.
(Visited 75 times, 1 visits today)
0