இலக்குவணபுரி: உச்சநீதிமன்றம் ராமர் கோயில் விஷயத்தில் தீர்ப்பை விரைந்து வழங்க வேண்டும். உச்சநீதிமன்றம் தன்னால் முடியாது என்று சொல்லிவிட்டால் போதும், மேலும் அரசு முடிவெடுக்கலாம் என்று சொன்னால் 24 மணி நேரத்தில் எனது அரசு இந்த விஷயத்தில் முடிவெடுத்து விடும். காங்கிரசே இந்த பிரச்சினை நீடிப்பதற்குக் காரணம்.
மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வராது என மோடி தெரிவத்துள்ளாரே என்று கேட்டதற்கு, வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலையில் கொண்டு வருவது இயலாது. ஆகையால் தான் அப்படி சொன்னார். இந்தியாவில் எப்போது ராமர் கோயில் பிரச்சினைக்கும், முத்தலாக் பிரச்சினையும் முடிவுக்கு வருகிறதோ அதன் பிறகு இங்கு தாஜா செய்யும் அரசியலுக்கு அரசியல் கட்சிகளிடம் இடம் இருக்காது. தேவையும் இருக்காது.
ராகுல் கோயிலுக்குச் செல்கிறாரே என்று கேட்கப்பட்டதற்கு, நேருவின் பார்வை தவறானது. இந்தியாவில் கோயிலுக்குச் செல்வதும் நெற்றியில் விபூதியும், திலகமும் இட்டால் மட்டுமே மக்கள் உங்களை நம்புவார்கள் என்பதை ராகுல் உணர்ந்துள்ளார். நேரு தவறான பார்வை கொண்டவர் என்பதை ராகுலே நிருபிக்கிறார் என்று பதில் அளித்தார்.