புதுடில்லி : மத்திய அரசு ‘உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் கையகப்படுத்திய, 67 ஏக்கர் நிலத்தை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே இது குறித்த வழக்கில் 1994 ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
இஸ்மாயில் பரூக்கி தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பிரச்சினை தொடர்பாக கையகப்படுத்திய 67.703 ஏக்கர் நிலத்தில் எந்தப் பணியும் மேற்கொள்ளக் கூடாது. மேலும் அந்த இடம் மத்திய அரசிடமே இருக்க வேண்டும்’ என 2003ல் உத்தரவிட்டிருந்தது .
அந்த உத்தரவில் திருத்தம் செய்து, கையகப்படுத்திய நிலத்தை, அதன் உரிமையாளர்களுக்கு திருப்பி ஒப்படைக்க அனுமதி அளிக்க வேண்டும். இஸ்மாயில் பரூக்கி தொடர்ந்த இதே வழக்கில், ‘எதிர்காலத்தில் நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்க நினைத்தால் மத்திய அரசு அதை மேற்கொள்ளலாம்’ என்றும் குறிப்பிட்டுள்ளது . எனவே அதன் அடிப்படையில் இந்த நிலத்தை அதன் உரிமையாளர்களான ராம் லீலாவிடம் 42 ஏக்கர் நிலத்தை திரும்ப ஒப்படைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுவில் மத்திய அரசு கூறியுள்ளது.