உபி: மனைவியைத் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு வர 30 நிமிடங்கள் அனுமதி அளித்த கணவர் , மனைவி கூடுதலாக 10 நிமிடங்கள் தாமதமாக வந்த காரணத்திற்காக மூன்று முறை தலாக் சொல்லி விவாகாரத்து செய்து உள்ளார். மனைவியின் அண்ணனுடைய கைபேசிக்கு அழைப்பு விடுத்து மும்முறை தலாக் சொல்லி விவாகாரத்து செய்வதாக சொல்லி உள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் , காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது கணவரின் சகோதரிகள் தன்னை அடித்துத் துன்புறுத்தினர் என்றும், தங்களது குடும்பம் ஏழ்மை என்பதால் கணவர் வீட்டில் கேட்ட வரதட்சனை பணத்தைச் செலுத்தாத காரணத்தால், தான் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் புகார் அளித்துள்ளார்.
மத்திய அரசு உடனடி முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தை கடந்த டிசம்பர் 27 ல் தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.
உள்ளூர் காவல் துறை முறையான நடவடிக்கையை எடுக்கவில்லை எனில் எனக்கு தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்தப் பெண் கண்ணீர் மல்க கூறி உள்ளார்.