ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
லஞ்சம் வாங்கிய கரூர் எஸ்ஐ கைது
கரூர்: கரூர் வாங்கல் போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரகுபதியை, ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடித்தனர். இதனை அடுத்து அவரைக் கைது செய்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை விடுவிக்க போலீசார் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர்.
(Visited 17 times, 1 visits today)