சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம். இந்த படத்தை பிரபல இயக்குனர் ராஜீவ்மேனன் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி யாதவ் ஒளிப்பதிவில் உருவாகி உள்ளது இந்தப்படம். அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் நடித்துள்ளனர். இசையில் ஆர்வமுள்ள ஓர் சாமானிய இளைஞன் எப்படி பல்வேறு தடைகளைத் தாண்டி வருகிறான் என்பதை கதை. இசைக்குக் குரு இயற்கை என்பதை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள கதை.
பிப்ரவரி 1ம் தேதி சிம்புவின் “வந்தா ராஜாவாத்தான் வருவேன்” படமும் வெளியாகிறது. சுந்தர் சி படம் என்பதால் மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே படத்தில் நடித்துள்ளது.
(Visited 53 times, 1 visits today)
+1