இந்தியாசெய்திகள்

ஜிசாட் 31 செயற்கைகோள் விண்ணில் பாய்கிறது

புதுடில்லி : பிப்ரவரி 6 ந்தேதி,  இந்தியாவின் தகவல் தொடர்பு வசதிக்காக “ஜிசாட்-31” செயற்கை கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து, விண்ணில் ஏவப்படுகிறது.

“ஜிசாட்-31” செயற்கை கோள், இஸ்ரோவின் 40 வது தகவல் தொடர்பு செயற்கைக் கோள் ஆகும். பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவில் இருந்து “ஏரியன்-5” ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இது ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கை கோள், டிவி ஒளிபரப்பு, டி.டி.எச். சேவை, மொபைல்போன் சேவை உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

(Visited 29 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close