இலக்குவணபுரி : உத்திரப் பிரதேச சியா மத்திய வாக்ப் போர்டு சேர்மன் வாசிம் ரிஸ்வி பிரதமர் மோடிக்கு எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். நாட்டிலுள்ள அனைத்துத் துவக்க நிலை மதராஸாக்களை மூடுங்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தாக்கமுள்ளதா என்று சோதிக்க வேண்டியது உள்ளது.
மதராசாக்களில் குறைந்தது பத்தாம் வகுப்பிற்குப் பின்னர் மாணவர்களைச் சேர்த்தால் போதுமானது. தற்போது சிறிய குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துவது மிக எளிதானது. மேலும் தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய மக்களிடையே தங்களுடைய கொள்கைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது . மதக் கல்வி என்ற பெயரில் அடிப்படை வதம் போதிக்கப்படுகிறது.
“மதராஸாக்களை நீங்கள் இப்போது மூடவில்லைஎன்றால் இன்னும் 15 ஆண்டுகளில் , இந்தியாவில் பாதிக்கும் அதிகமானோர் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்ததிற்குள் உள்ளாகிவிடுவார்கள். ” என்று ரிஸ்வி தனது கடிதத்தில் மோடியை முறையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி எச்சரிக்கை செய்துள்ளார்.
மேலும் தனது கடிதத்தில், “ஜம்மு காஷ்மீரில் இது வெளிப்படையாகவே தெரிகிறது “. இந்தியாவின் கிராமங்களில் உள்ள மதராசாக்களிலும் நன்கொடை என்ற பெயரில் பணம் கொடுத்துவிட்டு, சிறார்களை அடிப்படை வாதிகளாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன என்று எச்சரித்துள்ளார் ரிஸ்வி.