சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கில் தொடர்புடைய காவல்துறை முதன்மை அதிகாரி ராஜீவ் குமாரைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் குழு சென்றது. அவர்களை கைது செய்தது மேற்கு வங்கத்தின் காவல்துறை.
40 சிபிஐ அதிகாரிகள் இன்று மாலை ராஜீவ் குமார் இல்லத்தின் முன்பாக கைது செய்ய குழுமி இருந்தார்கள். அதே நேரத்தில் அங்கு குவிந்த வங்காள காவலர்கள் , அவர்களைக் கைது செய்தனர். மேலும் சிபிஐ அலுவலகத்தையும் முற்றுகை இட்டனர்.
சிபிஐக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த இந்த பிரச்சினை தற்போது பெங்கால் அரசுக்கும், மத்திய அரசுக்குமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
சிபிஐ இன்று இரவே உச்ச நீதி மன்றத்தை அணுகுவதாக செய்திகள் வருகின்றன. இன்னொரு புறம் மமதா பானர்ஜி போராட்டத்தில் இறங்கி உள்ளார். மேற்கு வங்காளத்தில் எந்தக் கட்சியின் ஊர்வலம் நடத்துவதாக இருந்தாலும் முட்டுக்கட்டை போடுவது, எதிர்க்கட்சிகள் பொதுக் கூட்டம் போடுவதற்குத் தடை போடுவது, நீதி மன்றம் சென்று அனுமதி பெற்று போட்டால் கலவரம் செய்வது என மமதா தனது அதிகாரத்தை அனைத்து வகைகளிலும் துஷ்பிரயோகம் செய்கிறார். ஜன நாயகத்தைக் கேலி கூத்தாக்குகிறார் என்று எதிர்க்கட்சிகள் குறம் சாட்டுகிறது.
இந்த நிலையில் சிபிஐ அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தப்பார்க்கிறது என்று மமதா குறம் சாட்டி போராட்டம் செய்கிறார். கூடவே ராஜீவ் குமார் என்ற காவல்துறை முதன்மை அதிகாரியும் போராட்டத்தில் பங்கெடுக்கிறார். அரசியல்வாதி போராடுவது வேறு, ஆனால் அதிகாரி எப்படி முதல்வரோடு சேர்ந்து போராட்டத்தில் குதிக்கிறார் என்று தெரியவில்லை.
மமதா தன்னுடைய ஆட்சியைக் கலைக்கத் தூண்டும் செயல்களில் வேண்டுமென்றே ஈடுபடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துரைக்கின்றனர். அதே வேளையில் ராகுல், சந்திர பாபு நாயுடு, கெஜ்ரிவால், மெஹபூபா, அகிலேஷ் யாதவ், ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்கள் மமதாவின் போராட்டத்தை வரவேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மமதா சிட்பண்ட் ஊழல் வழக்கின் முக்கிய ஆதாரங்களை அழிக்க முயல்கிறார் என்பதே அவர் மீது அரசியல் விமர்சகர்கள் வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் ஆதாயம் காரணமாகவே மமதாவின் இப்போராட்டத்தை ஆதரிக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.