சிறப்புக் கட்டுரைகள்சினிமாசெய்திகள்
யூரி – சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – சினிமா ஒரு பார்வை-1
”தேசப் பற்று என்பது கெட்ட வார்த்தை”
தமிழகத்தின் இந்திய விரோத தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அவர் சொன்னது இது. அவர் ஒரு அர்பன் நக்சல். இடதுசாரிகளுக்குப் பொதுவாக தேசப் பற்று என்பது அருவருப்பு ஏற்படுத்தும் ஒரு சொல். இடதுசாரியான அந்த டி வி நபரிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தை வந்தது எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை. அவர்கள் இந்தியாவின் ஒற்றுமையையும் வலுவையும் உயர்த்தும் எந்தவொரு நடவடிக்கையையுமே கீழாகவே நோக்கி அதை ஒடுக்கப் பார்ப்பார்கள். தேசப் பற்றுக்கு அவர்களது அகராதியில் உள்ள சொல் ஜிங்கோயிஸம் என்பது மட்டுமே. இப்படி சொல்லும் பத்திரிகையாளர்களும், எழுதும் எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் தமிழகத்தில் மட்டுமே மிக அதிகமானக் காணப் படுகிறார்கள். இங்குதான் கிட்னி மட்டும் அல்லாமல் மூளையும் அழுகிப் போன ஒரு அஞ்ஞாநியினால் ராணுவத்தினர் சமபளம் வாங்குவது எல்லையில் சாவதற்குத்தானே என்று கூசாமல் எழுத முடிந்தது. அப்படி எழுதுவதற்கான சுதந்திரத்தை அவனைப் போன்ற தேச விரோதிகளுக்கு அளித்ததே எல்லையில் தன் உயிரை விடும் ராணுவத்தினர்தான் என்ற உண்மையை இந்தக் கூலி எழுத்தாளர்கள் மறுக்கிறார்கள். ஏனென்றால் அவர்களது ஒரே நோக்கம் இந்தியாவின் அழிவு மட்டும் தானே அன்றி இந்தியாவின் வளர்ச்சியில் அல்ல. அப்படியா? இந்திய ராணூவத்தினர்களின் தியாகங்களுக்கு எந்த மதிப்பும் கிடையாதா என்ன?
தேசப் பற்று என்பது ஜெய் ஹிந்த் என்று கோஷம் இடுவதிலோ, பாரத் மாதாக் கீ ஜெய் சொல்வதிலோ அல்லது ஒரு கார்கில் போரின் பொழுது ஐந்து ரூபாய் நன்கொடை வழங்குவதிலோ மட்டும் அல்ல. இது என் தேசம். இதை என் வீட்டை விடவும் கண்ணும் கருத்துமாக நான் பார்ப்பேன். இந்த தேசம் எனக்கு அளித்த சுதந்திரத்திற்காகவும், வசதிகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் இயற்கைகளுக்காகவும் நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். என் வீட்டைப் போலவே இந்த தேசத்தை நான் தூய்மையாகப் பேணுவேன். ஊழல்களை அனுமதிக்க மாட்டேன். இந்த தேசத்தைக் காக்கும் காவல் தெய்வங்களாகிய ராணுவத்தினரை மரியாதையுடன் நடத்துவேன். இந்த தேசம் என்னுடைய தேசம். இதன் முன்னேற்றத்திற்காக இதன் பெருமைக்காக இதை மாட்சிமைக்காக இதன் இருத்தலுக்காக நான் என்னால் முடிந்த அனைத்து விதங்களிலும் செயல் படுவேன் என்று நினைத்து செயல் படுவதே தேசப் பற்றாகும். நான் என் தேசத்தை நேசிக்கிறேன் என்று சொல்வது இடதுசாரிகளுக்கும், இந்திய தேச விரோதிகளுக்கும், இந்தியாவின் எதிரிகளுக்கும் வேண்டுமானால் கெட்ட வார்த்தையாக இருக்கலாம் ஆனால் அதுவே இந்தியாவை உயர்த்தும் ஒற்றை மந்திரச் சொல்லாக இருக்கும்.

தேசப் பற்று என்பது இளம் பருவத்திலேயே சிறு வயதில் இருந்தே வளர்க்கப் பட வேண்டிய ஒரு குணம். பள்ளிகளில் நாம் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளின் வரலாறுகளைப் படிப்பதன் மூலமாகவும் அன்றாடம் செய்திகளில் தேசத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள், தன்னலமற்ற தலைவர்களின் செய்திகளைப் படிப்பதன் மூலமாகவும் தானாகவும் வர வேண்டிய ஒரு நற்பண்பு. நம் தாயிடம் எப்படி எவரும் சொல்லாமலேயே பாசம் வருகிறதோ அது போல தன்னிச்சையாகவும் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் மூலமாகவும் வர வேண்டிய நற்குணம் அது. பிறப்பும் வளர்ப்பும் சரியாக அமையாதவர்களுக்கும் இயற்கையாகவே வக்கிரம் பிடித்த மன வியாதிஸ்தர்களுக்கும் அவை என்றும் கைவரப் போவதில்லை. அவர்களுக்கு அது என்றுமே ஜிங்கோயிஸம் மட்டுமே.
எப்படி ஒரு காந்திக்கு தன் சிறு வயதில் கண்ட அரிச்சந்திரா நாடகம் மூலமாக பொய் சொல்லக் கூடாது என்ற உணர்வு ஏற்பட்டதோ அது போல இந்த தேசம் என் தேசம் என்றும் போற்றப் பட வேண்டிய பாதுகாக்கப் பட வேண்டிய ஒரு தேசம் என்ற எண்ணம் சிறு வயதிலேயே பலருக்கும் கப்பலோட்டிய தமிழன் போன்ற திரைப்படங்களைக் காண்பதன் மூலமாகவும் வந்திருக்கலாம். ஆனால் இப்பொழுதெல்லாம் கப்பலோட்டிய தமிழன் போன்ற சினிமாக்களை எவரும் எடுப்பதில்லை. இந்திய விரோத கொள்கைகள் அடங்கிய சினிமாக்கள் பிரபலப் படுத்தப் பட்டு அவை நம் இளைஞர்களின் சிறுவர்களின் தேசப் பற்றை முளையிலேயே கிள்ளி எறிகின்றன. இப்படியான ஒரு சூழ்நிலையில் தேசப் பற்றை ஊட்டும் எந்தவொரு சிறு முயற்சியும் கூட மிகப் பெரிய அளவில் வரவேற்கப் பட வேண்டும். போற்றப் பட வேண்டும் ஆதரிக்கப் பட வேண்டும். அந்த வகையில் சென்ற மாதம் வெளியாகியுள்ள யூரி- சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற திரைப் படத்தை இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டும் மேலும் பலருக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இனிமேல் திரைப்படத்திற்குள் போகலாம்
தொடரும்…
எண்ணமும் எழுத்தும்
விஸ்வமித்ரா
(Visited 673 times, 1 visits today)
+21
அருமை! தாய் மண்ணே தலைவணக்கம்!